Published : 17 Sep 2025 05:16 AM
Last Updated : 17 Sep 2025 05:16 AM

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்

பி.​வி.கரியமால்

அரூர்: இந்​திய குடியரசு கட்​சி​யின் மாநிலத் தலை​வர் (பி.​வி.கே அணி) பி.​வி.கரிய​மால் (98) உடல்​நலக் குறை​வால் நேற்று காலமானார். தரு​மபுரி மாவட்​டம் அரூர் அரு​கே​யுள்ள பாப்​பிசெட்​டிப்​பட்டி கிராமத்​தைச் சேர்ந்த பி.​வி.கரிய​மாலுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்​ளனர். மனைவி மற்​றும் ஒரு மகன் இறந்து விட்​டனர்.

சிறு வயதில் இருந்தே பட்​டியலின மக்​களுக்​காக பல்​வேறு போராட்​டங்​களை நடத்​திய இவர், தரு​மபுரி, கிருஷ்ணகிரி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் தாழ்த்​தப்​பட்ட மக்​களின் உரிமைக்​காக பாடு​பட்​ட​வர்.

இரட்டை குவளை முறை ஒழிப்​பு, தாழ்த்​தப்​பட்ட மக்​கள் ஆலய நுழைவுப் போராட்​டங்​களில் ஈடு​பட்​டார். அம்​பேத்​கரின் மகன் எஸ்​வந்​த​ராவ், முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா, விசிக தலை​வர் திரு​மாவளவன், பாமக நிறு​வனர் மருத்​து​வர் ராம​தாஸ் உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​களு​டன் நெருக்​க​மாக இருந்த இவர், 1991 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அரூர் தொகு​தி​யில் பாமக சார்​பிலும், 1996-ல் பாமக ஆதர​வுட​னும் போட்​டி​யிட்​டுள்​ளார்.

பி.​வி.கரிய​மால் உடலுக்கு நேற்று பல்​வேறு அரசி​யல் கட்​சிப் பிர​முகர்​கள், தொழிற்​சங்க நிர்​வாகி​கள், அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள், பொது​மக்​கள் உள்​ளிட்​டோர் அஞ்சலி செலுத்​தினர். அவரது உடல் இன்று நல்​லடக்​கம் செய்​யப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x