Published : 17 Sep 2025 06:03 AM
Last Updated : 17 Sep 2025 06:03 AM

கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

கரூர்: கரூரில் இன்று (செப்​.17) நடை​பெறும் திமுக முப்​பெரும் விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்​புரை​யாற்​றுகிறார். கரூர் கோடங்​கிப்​பட்​டி​யில் இன்று மாலை 5 மணிக்கு திமுக முப்​பெரும் விழா தொடங்​கு​கிறது. முன்​னாள் அமைச்​சரும், திமுக கரூர் மாவட்​டச் செய​லா​ள​ரு​மான வி.செந்​தில்​பாலாஜி வரவேற்​கிறார். பொதுச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான துரை​முரு​கன் தலைமை வகிக்​கிறார்.

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், விருதுகள் மற்​றும் பரிசுகள் வழங்கி சிறப்​புரை​யாற்​றுகிறார். கட்​சிப் பொருளாளர் டி.ஆர்​.​பாலு, முதன்​மைச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான கே.என்​. நேரு, துணை பொதுச் செய​லா​ளர்​கள் ஐ.பெரிய​சாமி, திருச்சி சிவா, ஆ.ரா​சா, கனி​மொழி, அந்​தி​யூர் ப.செல்​வ​ராஜ் ஆகியோர் வாழ்த்​துரை வழங்​கு​கின்​றனர்.

விழா​வில் கனி​மொழிக்கு பெரி​யார் விருது, பாளை​யங்​கோட்டை நகர்​மன்ற முன்​னாள் தலை​வர் சுப.சீத்​தா​ராமனுக்கு அண்ணா விருது, முன்​னாள் எம்​எல்ஏ சோ.​மா.​ராமச்​சந்​திரனுக்கு கலைஞர் விருது, மறைந்த தலை​மைச் செயற்​குழு உறுப்​பின​ரான குளித்​தலை சிவ​ராமன் குடும்​பத்​தா​ருக்கு பாவேந்​தர் பார​தி​தாசன் விருது, சட்​டப்​பேரவை முன்​னாள் கொறடா மருதூர் ராமலிங்​கத்​துக்கு பேராசிரியர் விருது, முன்​னாள் அமைச்​சர் பொங்​கலூர் பழனி​சாமிக்கு மு.க.ஸ்​டா​லின் விருது வழங்​கப்​படு​கிறது.

இதே​போல, முரசொலி அறக்​கட்​டளை சார்​பில் மூத்த பத்​திரி​கை​யாளர் ஏ.எஸ்​.பன்​னீர்​செல்​வத்​துக்கு முரசொலி செல்​வம் விருது மற்றும் முத்​தமிழறிஞர் கலைஞர் அறக்​கட்​டளை சார்​பில், ஒன்​றி​யம், நகரம், பகு​தி, பேரூர் ஆகிய​வற்​றில் கட்​சிப் பணி​யில் சிறப்பாக செயல்​படு​வோருக்கு நற்​சான்​று, பண முடிப்பு ஆகியவை வழங்​கப்​படு​கின்​றன. விழாவையொட்​டி, 3,000-க்​கும் அதி​க​மான போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​படு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x