Published : 17 Sep 2025 05:29 AM
Last Updated : 17 Sep 2025 05:29 AM

டிஜிபி தேர்வு குறித்து 26-ல் டெல்லியில் ஆலோசனை

சென்னை: தமிழக காவல் துறை​யின் புதிய டிஜிபியை தேர்வு செய்​வதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் வரும் 26-ம் தேதி டெல்​லி​யில் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த மாதம் 31-ம் தேதி​யுடன் பணிஓய்வு பெற்​றார்.

அடுத்த டிஜி​பியாக சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப்​ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் நியமிக்​கப்பட வாய்ப்பு உள்​ள​தாக கருதப்​பட்​டது. ஆனால், யாரும் எதிர்​பா​ராத வகை​யில் அவர்​களுக்கு ஜூனிய​ரான நிர்​வாகப் பிரிவு டிஜிபி வெங்​கட​ராமன், கூடு​தலாக சட்​டம் - ஒழுங்கு டிஜிபி பணியை கவனிப்​பார் என உள்​துறை செய​லா​ளர் தீரஜ்கு​மார் அறி​விப்பு வெளி​யிட்​டார்.

இந்​நிலை​யில், புதிய டிஜிபியை தேர்வு செய்​வதற்​கான பணியை தமிழக அரசு தொடங்கி உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் வரும் 26-ம் தேதி டெல்​லி​யில் நடை​பெற உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இந்​தக் கூட்​டத்​தில் அடுத்த டிஜிபி நியமனம் தொடர்​பாக விரி​வாக ஆலோ​சிக்​கப்பட உள்​ளது. டிஜிபி அந்​தஸ்​தில் உள்ள 8 பேர் கொண்ட பட்​டியல் ஏற்​கெனவே மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணையத்​துக்கு தமிழக அரசு அனுப்​பி​விட்​டது.

இந்த கூட்​டத்​தில் சீமா அகர்​வால், ராஜீவ்​கு​மார், சந்​தீப்​ராய் ரத்​தோர் ஆகியோரில் ஒரு​வர் புதிய டிஜிபி​யாக தேர்வு செய்​யப்பட வாய்ப்பு உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. ஆனால், புதிய டிஜிபி விவ​காரத்​தில் தமிழக அரசு தீவிர பரிசீலனைக்கு பின்​னரே முடிவு செய்யும் என தகவல்​ வெளி​யாகி உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x