Published : 16 Sep 2025 08:47 PM
Last Updated : 16 Sep 2025 08:47 PM

டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

கோப்புப் படம்

சென்னை: டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று இரவு எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அமித் ஷா இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னணி என்ன? - அதி​முக தொடர் தோல்​வியை சந்​தித்து வரும் நிலை​யில், கட்​சியை ஒன்​றிணைக்க வேண்​டும் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்கோட்​டையன் குரல் கொடுத்து வந்​தார். கடந்த செப்​.5-ம் தேதி அதி​முக ஒருங்​கிணைப்பை வலி​யுறுத்தி பரபரப்பை ஏற்​படுத்​திய செங்கோட்டையன், பழனி​சாமிக்கு 10 நாள் கெடு​வும் விதித்​தார். இதற்​கிடை​யில் அவர் டெல்​லி​யில் அமித் ஷாவை சந்​தித்து பேசி​விட்டு வந்​தார்.

அதி​முக தலை​மை​யில் கூட்​டணி அமைந்​துள்ள நிலை​யில், அதி​முக உட்​கட்சி விவ​காரத்​தில் ஒரு​வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்ட நிலை​யில், அவரை சந்​திக்க அமித் ஷா நேரம் ஒதுக்​கு​வதும், சந்​திப்​பதும் பழனி​சாமிக்கு வருத்​தத்தை ஏற்​படுத்தி இருப்​ப​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இது தொடர்​பாக​வும், கூட்​ட​ணியை வலுப்​படுத்​து​வது, கூட்​டணி கட்​சிகள் இணைந்து மக்​களை சந்​திப்​பது, இதர கட்​சிகளை கூட்​ட​ணிக்கு இழுப்​பது, தமிழகத்​தின் தற்​போதைய அரசி​யல் நில​வரம், விஜய் கட்​சிக்கு உள்ள மக்​கள் ஆதரவு உள்​ளிட்​டவை குறித்​தும் அமித் ஷா உடனான இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x