Published : 16 Sep 2025 06:14 AM
Last Updated : 16 Sep 2025 06:14 AM

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை

சென்னை: அடுத்த மாதம் தீபாவளி பண்​டிகை ​கொண்​டாடப்​பட​வுள்ள நிலை​யில்​, சென்​னை​யில் இருந்து சொந்த ஊர்​களுக்கு செல்​லும் பயணி​களின் வசதிக்​காக, சிறப்பு ரயில்​களை முன்​ன​தாகவே அறிவிக்க பயணி​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்​டிகை அக். 20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. ரயில் டிக்​கெட்​டைப் பொருத்​தவரை 60 நாட்​களுக்கு முன்பே முன்​ப​திவு செய்​யும் வசதி உள்​ளது. அதன்​படி, தீபாவளி பண்​டிகைக்​கான டிக்​கெட் முன்​ப​திவு கடந்த ஆக.17 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற்​றது. தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் நெல்​லை, கன்​னி​யாகுமரி, பாண்​டியன், பொதி​கை, முத்​துநகர் உள்ளிட்ட முக்​கிய ரயில்​களில் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் டிக்கெட்டுகள் சில நிமிடங்​களில் விற்று தீர்ந்​தன.

குறிப்​பாக, பாண்​டியன், நெல்​லை, பொதிகை ஆகிய ரயில்​களில் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்​களில் முடிந்​தது. காத்​திருப்​போர் பட்​டியலும் முடிந்து “ரெக்​ரெட்” என்று காட்​டியது. இதே​போல, மேற்கு மாவட்​டங்​களுக்​குச் செல்​லும் சேரன், நீல​கிரி உள்​ளிட்ட ரயில்​களி​லும், பகலில் இயக்​கப்​படும் வைகை, பல்​ல​வன் விரைவு ரயில்​களி​லும் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்து காத்​திருப்​போர் எண்​ணிக்கை நீண்​டது.

ரயில் டிக்​கெட் முன்​ப​திவை பொருத்​தவரை 82 சதவீதத்​துக்​கும் மேல் இணை​யதளம் வாயி​லாக​வும், மீத​முள்ள டிக்​கெட் முன்​ப​திவு ரயில் நிலைய கவுன்ட்​டர்​கள் மூல​மாக​வும் நடை​பெற்​றது. குறிப்​பாக, முன்​ப​திவு டிக்​கெட் பெற ரயில் நிலை​யத்​தில் உள்ள கவுன்ட்​டர்​களில் அதி​காலை முதல் நெடுநேரம் காத்​திருந்த பயணி​கள், டிக்​கெட் கிடைக்​காமல் ஏமாற்​றமடைந்​தனர். இதையடுத்​து, மக்​கள் சிறப்பு ரயில்​களை எதிர்​பார்த்து காத்​திருக்​கின்​றனர்.

பண்​டிகை சிறப்பு ரயில்​களை தாமத​மாக அறி​வித்​தால், பயணி​கள் சொந்த ஊர்​களுக்கு பயணிக்க திட்​ட​மிடு​வது கடின​மாகிறது. அதாவது, ரயில்​களில் கூட்ட நெரிசலும், அதிக கட்​ட​ணம் செலுத்​தும் நிலை​யும் ஏற்​படு​கிறது. எனவே, பயணி​களின் சிரமத்​தைக் குறைக்​கும் வித​மாக, சிறப்பு ரயில்​களை ரயில்வே நிர்​வாகம் முன்​ன​தாகவே அறிவிக்க பல்​வேறு தரப்​பினர் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்​து, தென் மாவட்ட ரயில் பயணி​கள் கதிர்​வேல், மணி​கண்​டன் கூறிய​தாவது: சென்​னை​யில் வசிக்​கும் நாங்​கள், வரும் தீபாவளி பண்​டிகைக்கு சொந்த ஊருக்​குச் செல்ல வசதி​யாக, கடந்த மாதம் மத்​தி​யில் டிக்​கெட் முன்​ப​திவு செய்ய ரயில் நிலைய கவுன்ட்​டர்​களில் முயற்​சித்​தோம். ஆனால், சில நிமிடங்​களில் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்​து, காத்​திருப்​போர் பட்​டியல் வந்​தது. இதனால், டிக்​கெட் கிடைக்​காமல் ஏமாற்​றம் அடைந்​துள்​ளோம். இன்​னும் பண்​டிகைக்கு ஒரு மாதமே இருக்​கிறது. எனவே, சிறப்பு ரயில்​களை எப்​போது அறி​விப்​பார்​கள் என்று எதிர்​பார்த்து இருக்​கிறோம்.

கடந்த சில ஆண்​டு​களாகவே பண்​டிகை சிறப்பு ரயில்​களை கடைசி நேரத்​தில் அறிவிக்​கின்​றனர். இதனால், பயணத்தை முன்​கூட்​டியே திட்​ட​மிட​முடி​யாத நிலை இருக்​கிறது. எனவே, இந்த ஆண்டு சிறப்பு ரயில்​களை முன்​ன​தாக அறிவிக்க வேண்​டும். அப்​போது தான் முன்​ப​திவு டிக்​கெட் எடுக்க வசதி​யாக இருக்​கும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இது குறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “தீ​பாவளி பண்​டிகை ஒட்​டி, சென்​னை​யில் இருந்து தமிழகத்​தின் தென், மத்​திய மேற்கு மாவட்​டங்​களுக்கு புறப்​படும் ரயில்​களில் காத்​திருப்​போர்​ பட்​டியல்​ அதி​க​முள்​ள ரயில்​களின்​ விவரத்​தை சேகரித்​து, அதன்​ அடிப்​படை​யில்​,அ ந்​த ரயில்​கள்​ செல்​லும்​ ​மார்​க்​கத்​தில்​ சிறப்​பு ரயில்​கள்​ இயக்​க நடவடிக்​கை எடுக்​கப்​படும்​” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x