Published : 16 Sep 2025 05:38 AM
Last Updated : 16 Sep 2025 05:38 AM

பழனிசாமி இன்று டெல்லி பயணம்: அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை

சென்னை: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி இன்று (செப்​.16) டெல்லி புறப்​பட்டு செல்​கிறார். அங்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை சந்​திக்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

அதி​முக தொடர் தோல்​வியை சந்​தித்து வரும் நிலை​யில், கட்​சியை ஒன்​றிணைக்க வேண்​டும் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் குரல் கொடுத்து வந்​தார். கடந்த செப்​.5-ம் தேதி அதி​முக ஒருங்​கிணைப்பை வலி​யுறுத்தி பரபரப்பை ஏற்​படுத்​திய செங்​கோட்​டையன், பழனி​சாமிக்கு 10 நாள் கெடு​வும் விதித்​தார். இதற்​கிடை​யில் டெல்​லி​யில் அமித் ஷாவை சந்​தித்து பேசி​விட்டு வந்​தார். அவரைத் தொடர்ந்து பழனி​சாமி​யும் இன்று டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார்.

அதி​முக தலை​மை​யில் கூட்​டணி அமைந்​துள்ள நிலை​யில், அதி​முக உட்​கட்சி விவ​காரத்​தில் ஒரு​வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்ட நிலை​யில், அவரை சந்​திக்க அமித் ஷா நேரம் ஒதுக்​கு​வதும், சந்​திப்​பதும் பழனி​சாமிக்கு வருத்​தத்தை ஏற்​படுத்தி இருப்​ப​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இதுதொடர்​பாக​வும், கூட்​ட​ணியை வலுப்​படுத்​து​வது, கூட்​டணி கட்​சிகள் இணைந்து மக்​களை சந்​திப்​பது, இதர கட்​சிகளை கூட்​ட​ணிக்கு இழுப்​பது, தமிழகத்​தின் தற்​போதைய அரசி​யல் நில​வரம், விஜய் கட்​சிக்கு உள்ள மக்​கள் ஆதரவு உள்​ளிட்​டவை குறித்​தும் விவா​திக்க இருப்​ப​தாகவும் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், பழனி​சாமி​யின் டெல்லி பயணம் குறித்​து, அதி​முக வெளி​யிட்ட அறிக்​கை​யில், “குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து வாழ்த்​து​வதற்​காக பழனி​சாமி டெல்லி செல்​கிறார்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பழனி​சாமி​யின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரி​வித்​துள்ள பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், “கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் என்ற முறை​யில் பழனி​சாமி​யும், அமித் ஷாவும் சந்​திப்​பது இயல்​பானது” என தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x