Published : 16 Sep 2025 01:57 AM
Last Updated : 16 Sep 2025 01:57 AM

திமுக நடத்திய ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ உறுதிமொழி ஏற்பு

சென்னை: ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்​பின் ஒரு பகு​தி​யாக, அண்ணா பிறந்த நாளான நேற்​று, திமுக சார்​பில் 68 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிக்​குட்​பட்ட பகு​தி​களில், ‘தமிழகத்தை தலைகுனிய விட​மாட்​டோம்’ என்ற உறு​தி​மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது.

ஓரணி​யில் தமிழ்​நாடு இயக்​கம், ஒரு கோடிக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​களை இணைத்​துள்​ளது. இதன் முதற்​கட்​டம் ஜூலை 1 முதல் 70 நாட்​களுக்​கும் மேல் நடை​பெற்​று, திமுக​வின் 7 லட்​சம் தொண்​டர்​கள் மூலம் 68,000 வாக்​குச்​சாவடிகளில் உள்ள குடும்​பங்​களைச் சந்​தித்​தனர். இந்​நிலை​யில், மாநிலம் முழு​வது​முள்ள 68 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான வாக்​குச்​சாவடிகளில் அந்​தந்த வாக்​குச்​சாவடிக்​குட்​பட்ட பகு​தி​யில் ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்பு மூலம் இணைந்​தவர்​களை ஒன்​று​திரட்​டி, உறு​தி​ மொழியேற்​கச் செய்ய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் ஒவ்​வொரு வாக்​குச்​சாவடிக்​குட்​பட்ட பகு​தி​களி​லும் திமுக​வில் இணைந்த குடும்​பத்​தினர் தமிழகத்தை தலைகுனிய​விட​மாட்​டோம் என உறு​தி​மொழியேற்​றனர். சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், முதல்​வர் ஸ்டா​லின் உறு​தி​யேற்பு நிகழ்வை தொடங்கி வைத்​தார். தொடர்ந்து தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற உறு​தி​மொழியேற்பு நிகழ்​வு​களில் அமைச்​சர்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள், இளைஞர், இளம்​பெண்​கள் என திரளானோர் பங்​கேற்று உறு​தி​மொழியேற்​றனர்.

குறிப்​பாக, கன்​னி​யாகுமரி​யில் கனி​மொழி எம்​.பி., திரு​வண்​ணா​மலை​யில் அமைச்​சர் எ.வ.வேலு, திருச்​சுழி தொகு​தி​யில் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு, சைதாப்​பேட்​டை​யில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், ஆவடி​யில் அமைச்​சர் ஆவடி நாசர், திண்​டுக்​கல்​லில் அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, கடலூரில் அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், திருப்​பத்​தூரில் அமைச்​சர் பெரியகருப்​பன், புதுக்​கோட்​டை​யில் அமைச்​சர் ரகுபதி ஆகியோர் தலை​மை​யிலும், திமுக எம்​.பி.க்​கள், எம்​எல்​ஏக்​கள், நிர்​வாகி​கள் பொது​மக்​கள் கூடி உறு​தி​மொழி ஏற்​றனர்.

இதில் நீட் விலக்​கு, தொகுதி மறு​வரையறை எதிர்ப்​பு, வாக்​காளர் பட்​டியல் மோசடி, கல்வி நிதி மறுப்​புக்கு எதிர்ப்​பு, தமிழ்த் தொன்மை இருட்​டடிப்​புக்கு எதிர்ப்பு ஆகிய 5 உறு​தி​மொழிகளை ஏற்று ‘‘தமிழகத்​தைத் தலைகுனிய விட​மாட்​டோம்’’ என உறு​தி​யேற்​றனர். மேலும், இதே உறு​தி​மொழி ஏற்பு நிகழ்ச்சி கரூரில் செப்​.17-ம் தேதி (நாளை) நடை​பெறும் முப்​பெரும் விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் நடக்க உள்​ளது. இதன் தொடர்ச்​சி​யாக, செப்.20, 21 அன்று மாவட்​ட அளவில்​ பொதுக்​கூட்​டங்​கள்​ நடை​பெற உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x