Published : 10 Sep 2025 06:09 AM
Last Updated : 10 Sep 2025 06:09 AM

அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் சந்திப்பு: பாஜகவின் அணுகுமுறை மாற்றத்தால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு

கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

கோவை: டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, நிர்​மலா சீதா​ராமன் உள்​ளிட்​டோரை அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் சந்தித்​துப் பேசி​யது அதி​முக கூட்டணியில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமிக்​கு, முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கெடு விதித்​தார்.

இதைத் தொடர்ந்​து, அவரிடம் இருந்த அமைப்​புச் செய​லா​ளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆகிய பதவி​களை பறித்து பழனி​சாமி நடவடிக்கை எடுத்​தார். இந்​நிலை​யில், செங்​கோட்​டையன் நேற்று முன்​தினம் காலை கோவை​யில் இருந்து டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார்.

ஹரித்​வார் செல்​வ​தாக கூறிச்​சென்ற அவர், திடீரென டெல்லி சென்று மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, நிர்​மலா சீதா​ராமன் உள்ளிட்​டோரை சந்​தித்​துப் பேசி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகின. இந்​நிலை​யில், நேற்று மதி​யம் டெல்​லி​யில் இருந்து கோவை திரும்​பிய செங்​கோட்​டையன், கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நான் ஹரித்​வார் செல்​கிறேன் என கூறி​விட்​டுச் சென்​றேன்.

டெல்லி சென்​றவுடன், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை சந்​திக்க அனு​மதி கிடைத்​தது. இதையடுத்​து, அமித்ஷாவையும், மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை​யும் சந்​தித்​தேன். இன்​றைய அரசி​யல் சூழல் குறித்து கருத்​துகள் பரி​மாற்​றம் செய்​யப்​பட்​டன.

அனை​வரும் ஒன்​றிணைய வேண்​டும். அதி​முக வலிமை பெற வேண்​டும் என்ற நோக்​குடன், அவர்​களிடம் பல்​வேறு கருத்​துகளை எடுத்​துரைத்​தோம். இந்த கருத்​துகளின் அடிப்​படை​யில் பல்​வேறு விவாதங்​கள் நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கின்​றன. ஒவ்​வொரு​வருக்​கும் ஜனநாயக உரிமை இருக்​கிறது என்ற அடிப்​படை​யில், இது தொடர்பாக பல்​வேறு தரப்​பினரும் அவர​வர் கருத்​துகளை வெளி​யிட்டு வரு​கின்​றனர். இது வரவேற்​கத்​தக்கது.

உள்​துறை அமைச்​சர் அமித்​ஷாவை சந்​திக்​கும்​போது, மத்​திய ரயில்வே துறை அமைச்​சர் அங்கே வந்​தார். அவரிடம், ஈரோட்​டில் இருந்து சென்னை புறப்​படும் எக்​ஸ்​பிரஸ் ரயில் தற்​போது முன்​கூட்​டியே புறப்​பட்​டுச் செல்​வ​தால், பொது​மக்​கள், வியா​பாரி​கள், மாணவர்​கள் செல்​வதற்கு கடின​மாக இருக்​கிறது. அதிகாலை 3 மணிக்கே சென்னை சென்று விடு​கிறது.

அந்த நேரத்தை மாற்​றி​னால் உதவி​யாக இருக்​கும் என்று கோரிக்கை விடுத்​தேன். இதை பரிசீலிப்​ப​தாக மத்​திய அமைச்​சர் தெரி​வித்​தார். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​. பாஜகவின் அணுகுமுறை மாற்றத்தால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x