Last Updated : 09 Sep, 2025 02:28 PM

3  

Published : 09 Sep 2025 02:28 PM
Last Updated : 09 Sep 2025 02:28 PM

செப்.13 முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - முழு விவரம்

சென்னை: தவெக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில், மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை வார இறுதி நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். விஜய்யின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது. விஜய் வார இறுதிகளில் (குறிப்பாக சனிக்கிழமைகளில்) மக்களைச் சந்தித்து பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

விஜய் எந்த தேதியில் எங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. செப். 13, 2025 - திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
2. செப். 20, 2025 - நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
3. செப். 20, 2025 - திருவள்ளூர், வட சென்னை
4. அக்.4 மற்றும் அக்.5, 2025 - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
5. அக். 11, 2025 - கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி
6. அக். 18, 2025 - காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
7. அக். 25, 2025 - தென்சென்னை, செங்கல்பட்டு
8. நவ.1, 2025 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
9. நவ.8, 2025 - திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
10. நவ.15, 2025 - தென்காசி, விருதுநகர்
11. நவ.22, 2025 - கடலூர்
12. நவ. 29, 2025 - சிவகங்கை, ராமநாதபுரம்
13. டிச.6, 2025 - தஞ்சை, புதுக்கோட்டை
14. டிச.13, 2025 - சேலம், நாமக்கல், கரூர்
15. டிச. 20, 2025 - திண்டுக்கல், தேனி, மதுரை

மேலும், இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போது, அந்தந்த இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்தை முறைப்படுத்தி தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x