Published : 09 Sep 2025 06:05 AM
Last Updated : 09 Sep 2025 06:05 AM

தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை

சென்னை: தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளி​கைக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த இளைஞர் பிடிபட்​டுள்​ளார். அவரிடம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். புதுக்​கோட்​டை​யில் செயல்​பட்டு வரும் 108 ஆம்​புலன்ஸ் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று காலை செல்​போன் அழைப்பு ஒன்று வந்​தது.

எதிர்​முனை​யில் பேசிய நபர், தலை​மைச் செயல​கம் மற்​றும் ஆளுநர் மாளி​கை​யில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்தில் வெடித்​துச் சிதறும். முடிந்​தால் தடுத்​துப்​ பாருங்​கள் எனக் கூறி இணைப்பை துண்​டித்​து​விட்​டார்.

இது தொடர்​பாக, சென்னை போலீ​ஸாருக்கு உடனடி​யாக தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, காவல் ஆணை​யர் அருண் உத்​தர​வுப்​படி கோட்டை போலீ​ஸார் வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய் உதவி​யுடன் தலை​மைச் செயல​கம் சென்று அனைத்து இடங்​களி​லும் சோதனை​யில் ஈடு​பட்​டனர். முடி​வில் சந்​தேகப்​படும்​படி எந்த வெடிபொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.

இதே​போல், கிண்டி போலீ​ஸாரும் வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள், மோப்ப நாயுடன் விரைந்து ஆளுநர் மாளிகை முழு​வதும் சோதித்​தனர். அங்​கே​யும் வெடிபொருட்​கள் கைப்​பற்​றப்​பட​வில்​லை. எனவே, 2 இடங்​களி​லும் புரளியைக் கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்து, சைபர் க்ரைம் போலீ​ஸார் உதவி​யுடன் கோட்டை மற்​றும் கிண்டி போலீ​ஸார் ஒருங்​கிணைந்து விசா​ரணையை முன்​னெடுத்​தனர். இதில் வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தது விழுப்​புரத்​தைச் சேர்ந்த தேவேந்​திரன் (36) என்​பது தெரிய​ வந்​தது.
உடனடி​யாக, அங்கு விரைந்த போலீ​ஸார் மிரட்​டல் விடுத்த தேவேந்​திரனை பிடித்து விசா​ரித்​தனர்.

அவர் சற்று மனநலம் பாதிக்​கப்​பட்​ட​வர்​போல் இருந்​துள்​ளார். இதையடுத்து, அவரது பெற்​றோரைச் சந்​தித்து தேவேந்​திரனின் நடவடிக்​கை​யைக் கண்​காணிக்​கும்​படி​யும், இது​போன்ற நடவடிக்​கை​களில் தொடர்ந்து ஈடு​பட்​டால் கைது செய்​யப்​படு​வார் எனவும் எச்​சரித்​து​விட்டு சென்னை திரும்​பினர். ஒரே நேரத்​தில் தலை​மைச் செயல​கம் மற்​றும் ஆளுநர் மாளி​கை​யில் வெடிகுண்​டு​களைக் கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் சோதனை நடத்​தி​ய​தால் அங்கு சிறிது நேரம்​ பரபரப்​பான சூழல்​ ஏற்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x