Published : 09 Sep 2025 06:51 AM
Last Updated : 09 Sep 2025 06:51 AM

210-ல் வெற்றி என்ற பழனிசாமி கனவு நிறைவேறாது: கனிமொழி எம்.பி. விமர்சனம்

சென்னை: அ​தி​முக 210 தொகு​தி​களில் வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி சொல்​வது அவரது கனவு என்று கனி​மொழி எம்​.பி. தெரி​வித்​தார்.

குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நாடாளு​மன்ற வளாகத்​தில் இன்று நடக்​கிறது. இதற்காக தமிழக எம்​.பி.க்​கள் சென்​னை​யில் இருந்து விமானங்​கள் மூலம் நேற்று டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றனர். முன்​ன​தாக, நாடாளு​மன்ற திமுக குழுத் தலை​வர் கனி​மொழி எம்​.பி. செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: குடியரசு துணைத் தலை​வ​ர் எதற்​காக திடீரென ராஜி​னாமா செய்​தார் என்ற கேள்வி​களுக்கு பதில் இல்​லை. இப்​படிப்​பட்ட சூழ்​நிலை​யில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடக்​கிறது.

ஜனநாயகத்​தின் மீது நம்​பிக்கை உள்ள அத்​தனை எதிர்க்​கட்​சிகளும் சேர்ந்​து, ஒரு வேட்​பாளரை நிறுத்தி இருக்​கிறோம். ஜனநாயகத்தை காப்​பாற்​ற வேண்டிய கட்​டா​யத்​தில் நாடு தள்​ளப்​பட்​டுள்​ளது. எங்​கள் வேட்​பாளரை வெற்றி பெற செய்ய உழைத்துக் கொண்டு இருக்​கிறோம்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் 210 தொகு​தி​களில் வெற்றி பெறு​வோம் என்று கூறி​யிருப்​பது, அவருடைய கனவு. அந்த கனவில்​கூட சில தொகு​தி​களை எதிர்க்​கட்​சிகளுக்கு விட்டுக் கொடுத்​திருக்​கிறார். பழனிச்​சாமி​யின் கனவு நிறைவேறாத கனவாகத் தான் முடி​யும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x