Published : 09 Sep 2025 06:52 AM
Last Updated : 09 Sep 2025 06:52 AM

சேலம், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை

சேலம்: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, சேலத்​தில் அவரது இல்​லத்​தில் சேலம், ஈரோடு மாவட்ட நிர்​வாகி​களு​டன் ஆலோசனை நடத்​தி​னார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, மதுரை மாவட்​டத்​தில் சுற்​றுப்​பயணத்தை முடித்​துக் கொண்டு நேற்று முன்​தினம் சேலத்​தில் உள்ள தனது இல்​லத்​துக்கு திரும்​பி​னார்.

அவரை சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த முக்​கிய நிர்​வாகி​களான முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் எம்​.கே.செல்​வ​ராஜ், வெங்​க​டாசலம், முன்னாள் எம்​.பி பன்​னீர்​செல்​வம், ஈரோடு மாநக​ராட்சி முன்​னாள் மேயர் பழனி​சாமி, ஈரோடு ஒன்​றிய செய​லா​ளர் ராமலிங்​கம் உள்பட கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​கள் சந்​தித்​துப் பேசினர்.

அப்​போது, முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் பேட்​டியளித்​ததன் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார் என்​பது குறித்​தும், அவருக்கு ஆதர​வாக செயல்​படும் நிர்​வாகி​களை ரகசி​ய​மாக கண்​காணித்து களை​யெடுப்​பது குறித்​தும் ஆலோ​சனை நடத்​தி​ய​தாக நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர்.

அதே​போல, ஈரோடு மாவட்​டத்​தில் கட்சி பதவி​களை ராஜி​னாமா செய்​தவர்​களுக்கு மாற்​றாக புதிய நிர்​வாகி​களை நியமிப்​பது தொடர்​பாக கட்​சி​யினருடன் அதி​முக பொதுச் செய​லா​ளர் ஆலோ​சனை​யில் ஈடுபட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x