Published : 09 Sep 2025 06:17 AM
Last Updated : 09 Sep 2025 06:17 AM

கூட்டணிக் கட்சிகளை கூறு போடுவது பாஜக வழக்கம்: செல்வப்பெருந்தகை கருத்து

சென்னை: கூட்​டணி கட்​சிகளை பிளவுபடுத்​தி, கூறு போடு​வது பாஜக​வின் வழக்​கம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

சென்னையில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​து: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மதுரை விமான நிலை​யத்​துக்கு முத்​து​ராமலிங்க தேவர் பெயரை வைப்​போம் என்று பேசி​யிருக்​கிறார். 10 ஆண்​டு​களாக அதி​முக ஆட்சி நடந்​தது. 4 ஆண்​டு​கள் இவர் முதல்​வ​ராக இருந்​தார்.

அப்​போது ஏன் வாய் திறக்​க​வில்​லை. இவர் செய்​வது சந்​தர்ப்​ப​வாத அரசி​யல். முத்​து​ராமலிங்க தேவர் மீது எந்த பற்​றும் பழனி​சாமிக்கு கிடை​யாது. செங்​கோட்​டையன் விவகாரம் அவர்​களு​டைய உட்​கட்சி பிரச்​சினை.

பாஜக எங்கெல்​லாம் கூட்​டணி வைக்கிறார்​களோ அந்த கட்​சியை பிளவுபடுத்​தி, கூறு போடு​வது தான் வழக்​கம். மகா​ராஷ்டி​ரா​வில் சிவசேனா கட்​சி​யில் இருந்து ஏக்நாத் ஷிண்​டேவை பிரித்​தது போல பாஜக எங்​கெல்​லாம் செல்​கிறதோ அங்​கெல்​லாம் கட்​சியை பிளவுபடுத்தி கூறு போடும் பணியை செய்து வரு​கிறது. இவ்​வாறு கூறி​னார்.

முன்​ன​தாக அகில இந்​திய காங்​கிரஸ் ஊடகத் துறை தலை​வர் பவன் கேரா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை என மக்​கள் மீது திணிக்க மத்​திய பாஜக அரசு முயற்​சித்து வரு​கிறது. ஒவ்​வொரு தனி மனிதனுக்​கும் வாக்​குரிமையை அரசி​யல் சாசனம் வழங்​கி​யுள்​ளது. அந்த உரிமையை கூட கொடுக்​காமல் வாக்கு திருட்​டி​யில் தேர்​தல் ஆணை​ய​மும், பாஜக​வும் ஈடு​படு​கின்​றன.

ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் கடைக்​கோடி நிலை​யி​லிருந்து காங்​கிரஸ் கட்​சியை வலுப்​படுத்தி வரு​கிறோம். இளைஞர்​கள் அதிக அளவில் கட்​சி​யில் சேர்ந்து வரு​கின்​றனர். தமிழகத்​தில் காங்​கிரஸ் வலிமை பெற்று வரு​கிறது. கர்​நாட​கா, தெலங்​கானா போன்ற மாநிலங்​களில் காங்​கிரஸ் வலிமை​யாக உள்​ளது. கேரளா​வில் ஆட்​சி​யைப் பிடிக்​கும் அளவுக்​கு வலு​வாக உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x