Published : 09 Sep 2025 05:41 AM
Last Updated : 09 Sep 2025 05:41 AM

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாயார் காலமானார்: பழனிசாமி இரங்கல்

சட்டப்பேரவை எதிக்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாளின் உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை: பேரவை எதிர்க்​கட்சி துணைத் தலை​வரும் முன்​னாள் அமைச்​சரு​மான ஆர்​.பி.உதயகு​மாரின் தாயார் பி.மீ​னாள் அம்மாள் (74) மதுரை​யில் நேற்று கால​மா​னார். அவரது உடல் அஞ்​சலிக்​காக டி.குன்​னத்​தூர் அம்மா நினைவு மண்டபத்​தில் வைக்கப்பட்​டது.

மீனாள் அம்​மாள் மறைவுக்கு அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, அமைச்​சர் தங்​கம் தென்​னரசு, முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, செல்​லூர் ராஜூ ஆகியோ​ர் தொலைபேசியில் உதய கு​மாருக்கு ஆறு​தல் கூறினர்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் திண்​டுக்​கல் சீனி​வாசன், நத்​தம் விஸ்வ​நாதன், கே.டி.​ராஜேந்​திர பாலாஜி, கடம்​பூர் ராஜு, காம​ராஜ், விஜய​பாஸ்​கர், வைகைச் செல்​வன், மாவட்​டச் செய​லா​ளர்​கள் ராஜன் செல்​லப்​பா, முரு​கோடை​ராமர், எஸ்​.டி.கே.ஜக்​கையன், செந்​தில்​நாதன், முனிய​சாமி, தச்சை கணேச​ராஜா. எம்எல்ஏக்கள் பெரிய புள்​ளான், பூமி​நாதன், திரைப்பட தயாரிப்​பாளர் அன்​புச் செழியன்.

பாஜக இராம.சீனி​வாசன், தேவேந்​திரகுல வேளாளர் கூட்​டமைப்பு தலை​வர் சந்தன பிரியா பசுபதி பாண்​டியன், வேலம்​மாள் குழு​மத் தலை​வர் முத்​து​ராமலிங்​கம், சேம்​பர் ஆப் காமர்ஸ் தலை​வர் ஜெகதீசன் உட்பட பலர் அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர், அம்மா நினைவு மண்டப வளாகத்​திலேயே​ உடல் அடக்​கம்​ செய்​யப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x