Published : 08 Sep 2025 06:36 AM
Last Updated : 08 Sep 2025 06:36 AM

நாய்களின் பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: ​நாய்​களின் பெருக்​கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை கிண்​டி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை​யில் அவர் செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்றபோது, ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள் மற்​றும் நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பாம்​புக்​கடி, நாய்க்​கடிகளுக்​கான மருந்​துகள் இல்​லை.

கிராமங்​களில் பாம்​புக்​கடி, நாய்க்​கடி பாதிப்பு​களுக்கு உள்​ளாகும்போது, வட்​டார மருத்​து​வ​மனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவ​மனை, மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் தான் வர வேண்​டும். ஆனால், தற்​போது தமிழகத்​தில் உள்ள 2,256 ஆரம்பசுகா​தார நிலை​யங்கள் உட்பட அனைத்து அரசு மருத்​து​வ​மனை​ களி​லும் பாம்​புக்​கடிக்​கான ஏஎஸ்வி மருந்து, நாய்க்கடிக்கான ஏஆர்வி மருந்து இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது.

நாய்​களின் பெருக்​கத்​தை குறைப்​பது, நாய்​களி​னால் ஏற்​படும் பாதிப்​பு​களுக்கு முதல்​வர் தலை​மை​யில் தலைமை செய​லா​ளர் மற்றும் சம்​பந்​தப்​பட்ட துறை அமைச்​சர்​களு​டன் கூட்​டம் நடத்​தப்​பட்​டது. பின்​னர், நாய்​களின் பெருக்​கத்தை குறைக்​க​வும், பாதிப்புகளை தடுக்​க​வும் பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தா​ர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x