Published : 08 Sep 2025 06:25 AM
Last Updated : 08 Sep 2025 06:25 AM

போக்குவரத்து ஊழியர்களுக்கு கடன் வழங்குவது தற்காலிக நிறுத்தம்: கூட்டுறவு சேமிப்பு சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் 4 மண்​டலங்​களைச் சேர்ந்த போக்​கு​வரத்து ஊழியர்​களுக்கு கடன் வழங்​கு​வதை தற்​காலிக​மாக நிறுத்திவைப்​ப​தாக போக்​கு​வரத்​துக் கழக பணி​யாளர்​கள் கூட்​டுறவு சிக்கன சேமிப்பு மற்​றும் கடன் சங்​கம் அறி​வித்​துள்​ளது.

போக்​கு​வரத்​துக் கழக பணி​யாளர்​கள் கூட்​டுறவு சிக்கன சேமிப்பு மற்​றும் கடன் சங்​கத்​தில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், விழுப்​புரம் போக்​கு​வரத்​துக் கழகம் மற்​றும் அரசு விரைவு போக்​கு​வரத்து கழகம் உள்​ளிட்​ட​வற்​றைச் சார்ந்த பணி​யாளர்​கள் உறுப்​பினர்​களாக உள்​ளனர்.

போக்​கு​வரத்து பணி​யாளர்​களின் சேமிப்பை ஊக்​கு​வித்​தல், கடன் வழங்​குதல் உள்​ளிட்ட பணி​களை கூட்​டுறவு சங்​கம் மேற்​கொண்டு வரு​கிறது. அந்த வகை​யில் மாதம் தோறும் கடன் மனுக்​கள் பெறப்​பட்​டு, கடன் தொகை வழங்​கு​வது வழக்​கம். இந்நிலையில் 4 மண்டலங்​களைச் சேர்ந்த ஊழியர்​களுக்கு கடன் வழங்க முடி​யாத நிலை இருப்​ப​தாக கூட்​டுறவு சங்​கம் தெரிவித்துள்​ளது.

இது தொடர்​பாக சங்​கத்​தினர் செய​லா​ளர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: போக்குவரத்​துக் கழகங்​கள் உறுப்​பினர்​களின் கடனுக்​கான தொகையை சம்​பளத்​தில் பிடித்​தம் செய்​து, மாத தவணை தொகையை 9 மாத கால​மாக சங்​கத்​துக்கு செலுத்தாமல் ரூ.15.26 கோடி அளவில் நிலுவை வைத்​துள்​ளன.

எனவே, விழுப்​புரம் போக்​கு​வரத்​துக் கழகம், திரு​வண்​ணா​மலை, வேலூர், காஞ்​சிபுரம் ஆகிய மண்​டலங்​களைச் சேர்ந்த உறுப்​பினர்களுக்கு சங்​கத்​தின் மூலம் கடன் வழங்​கு​வது மற்​றும் சங்க கணக்கை முடிப்​பது ஆகியன தற்காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​படுகிறது. பிடித்​தம் செய்த தொகையை போக்​கு​வரத்​துக் கழகங்​களிட​மிருந்து வசூலிக்க சட்​டப்​பூர்வ நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x