Published : 08 Sep 2025 07:58 AM
Last Updated : 08 Sep 2025 07:58 AM

செங்கோட்டையனின் ஆதரவாளர் சத்தியபாமாவின் கட்சி பதவி பறிப்பு - பின்னணி என்ன?

சென்னை: அதி​முக முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையனின் ஆதர​வாள​ரும், முன்​னாள் எம்​.பி.​யு​மான சத்தியபாமாவையும் கட்சி பொறுப்​பு​களில் இருந்து பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நீக்​கி​யுள்​ளார். அதி​முக முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன், 2025-ம் ஆண்டு தொடக்​கம் முதலே பழனி​சாமி மீது அதிருப்​தி​யில் இருந்​தார்.

கோவை​யில் விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் பழனி​சாமிக்கு நடத்​திய பாராட்டு விழா​வில், ஜெயலலிதா படம் இடம்​பெற​வில்லை எனக்​கூறி புறக்​கணித்​தார். பழனி​சாமி மீதான அதிருப்தி தொடர்​பாக டெல்லி சென்று பாஜக மூத்த தலை​வர்​களை​யும் சந்​தித்து பேசி​னார். சட்​டப்​பேரவை பட்​ஜெட் கூட்​டத்​தொடரில் கூட பழனி​சாமியை நேருக்கு நேர் சந்​திப்​பதை தவிர்த்து வந்​தார். சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் தொடர்​பான எம்​எல்​ஏக்​கள் ஆலோ​சனை கூட்​டத்​தி​லும் அவர் பங்​கேற்​க​வில்​லை.

இந்​நிலை​யில் கடந்த செப்​.5-ம் தேதி கோபிச்​செட்​டிப்​பாளை​யத்​தில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த செங்​கோட்​டையன், “அதி​முக​விலிருந்து பிரிந்து சென்​றவர்​களை 10 நாட்​களுக்​குள் ஒன்​றிணைக்க வேண்​டும். இல்​லா​விட்​டால், பழனி​சாமி​யின் பிரச்​சார சுற்​றுப்​பயணத்​தில் பங்​கேற்​க​மாட்​டேன். பிரிந்து சென்​றவர்​களை நான் ஒன்​றிணைப்​பேன்” என அறி​வித்​திருந்​தார்.

பழனிசாமிக்கு கடிதம்: இதனைத் தொடர்ந்​து, திண்​டுக்​கல்​லில் மூத்த அதி​முக தலை​வர்​களு​டன் ஆலோ​சித்த பழனி​சாமி, செங்​கோட்​டையன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் 7 பேரின் கட்சி பதவி​களை பறித்​து, பழனி​சாமி உத்​தர​விட்​டிருந்​தார். அதனைத் தொடர்ந்​து, செங்​கோட்​டையனின் ஆதர​வாள​ரும், முன்​னாள் எம்​.பி.​யு​மான சத்​தி​ய​பாமா உள்​ளிட்​டோர் தங்​கள் பதவி​களை​யும் பறிக்​கு​மாறு பழனி​சாமிக்கு கடிதம் அனுப்பி இருந்​தனர்.

இந்​நிலை​யில் சத்​தி​ய​பா​மா​வின் கட்சி பதவி​களை​யும் பழனி​சாமி பறித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “அதி​முக தலை​மைச் செயற்​குழு உறுப்​பினர் பொறுப்​பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செய​லா​ளர் பொறுப்​பிலும் இருக்​கும் ஏ.சத்​தி​ய​பா​மா, இன்று முதல் அப்​பொறுப்​பு​களில் இருந்து விடுவிக்​கப்​படு​கிறார்” என்​று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x