Published : 08 Sep 2025 05:51 AM
Last Updated : 08 Sep 2025 05:51 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை

சென்னை: தீபாவளி பண்​டிகையை ஒட்​டி, விரைவு ரயில்​களில் ஓரிரு கூடு​தல் பெட்​டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்​டுள்​ள​தாக தெற்கு ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இந்​தாண்டு தீவாவளி பண்​டிகை அக்​.20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து குறிப்​பிட்ட நாட்​களில் சொந்த ஊருக்கு செல்​லும் ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்​து​விட்​டது.

இதையடுத்​து, பயணி​கள் நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்​களை இயக்க பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், தீபாவளி பண்​டிகையை ஒட்​டி, விரைவு ரயில்​களில் ஓரிரு கூடு​தல் பெட்​டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த ஆண்​டும் தீபாவளி பண்டிகைகால ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு சில நிமிடங்​களில் முடிந்​து​விட்​டது. சிறப்பு ரயில்​கள் அறி​விப்​புக்​காக பொது​மக்​கள் காத்​திருக்​கின்​றனர். எனவே, பயணி​கள் தேவை மிக்க வழித்​தடங்​களில், தீபாவளி சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படும். விரைவு ரயில்​களில் அதி​கபட்​ச​மாக 24 பெட்​டிகள் வரை இணைத்து இயக்க முடி​யும்.

குறிப்​பாக, கொல்​லம், செங்​கோட்​டை, நாகர்​கோ​வில், திருநெல்​வேலி, கோவை, மதுரை உள்​ளிட்ட நெரிசல் மிக்க வழித்​தடங்​களில் செல்​லும் விரைவு ரயில்​களில், ஓரிரு பெட்​டிகள் கூடு​தலாக இயக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.இத​னால், காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள பயணி​களுக்கு இடம் கிடைக்க வாய்ப்​பு உள்​ளது இவ்​வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x