Published : 08 Sep 2025 05:28 AM
Last Updated : 08 Sep 2025 05:28 AM

தமிழகத்​தில் சில மாவட்​டங்​களில் செப்.10-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்ப​தாவது: தென்​னிந்​தி​யப் பகுதிகளின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் இன்று (செப்​.7) முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்​களில் இடி மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். வரும் 11 முதல் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழைக்கு வாய்ப்​புள்​ளது.

தமிழகத்​தில் இன்று தேனி, திண்​டுக்​கல், மதுரை மற்​றும் சிவகங்கை மாவட்​டங்​களி​லும். நாளை திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி, தேனி, திண்​டுக்​கல், மதுரை, சிவகங்கை மாவட்​டங்​களி​லும், வரும் 10-ம் தேதி வேலூர், ராணிப்​பேட்​டை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வண்​ணா​மலை, நீல​கிரி, தேனி, திண்​டுக்​கல் மற்​றும் மதுரை மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நாளை வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல் பகு​தி​கள் மற்​றும் மன்​னார் வளை​குடா பகு​தி​களில் இன்​றும், நாளை​யும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக விழுப்​புரம் மாவட்​டம் செஞ்​சி, சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் ஆகிய இடங்​களில் 10 செ.மீ. விழுப்​புரம் மாவட்​டம் வல்​லம், சென்னை மணலி புதுநகரில் 9 செ.மீ. புதுக்​கோட்டை மாவட்​டம் ஆயிங்​குடி, விழுப்​புரம் மாவட்​டம் ஆனந்​த​புரம், பெரம்​பலூர் மாவட்​டம் செட்​டிகுளம், திருச்சி மாவட்​டம் வத்​தலை அணைக்​கட்டு ஆகிய இடங்​களில் 7 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x