Published : 07 Sep 2025 03:40 PM
Last Updated : 07 Sep 2025 03:40 PM
சென்னை: முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையைத் தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் குடும்பத்தினருடனான சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: "முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க ஜான் பென்னிகுயிக் அவர்களது புகழ்!” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT