Published : 07 Sep 2025 12:34 AM
Last Updated : 07 Sep 2025 12:34 AM

கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி 

சென்னை: ​கால்​நடை பராமரிப்​புத் துறை​யில் கால்​நடை ஆய்​வாளர் பதவிக்கு புதிய கல்​வித்​தகுதி நிர்​ண​யித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பிளஸ் 2-வில் உயி​ரியல் அல்​லது தாவர​வியல்- விலங்​கியல் பாடங்​களு​டன் ஏதேனும் ஒரு பட்​டப்​படிப்பு படித்​திருக்க வேண்​டும்.

இதுதொடர்​பாக தமிழக அரசின் கால்​நடை பராமரிப்​பு, பால்​வளம் மீன்​வளம் மற்​றும் மீனவர் நலத்​துறை​யின் செயலர் என்​.சுப்​பையன் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: கால்​நடை பராமரிப்​புத் துறை​யில் கால்​நடை ஆய்​வாளர்- கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமன​மும் பதவி உயர்​வும் 9:1 என்ற விகி​தாச்​சார அடிப்​படை​யில் மேற்​கொள்​ளப்​படும். நேரடி நியமனத்​துக்கு ஏதேனும் ஒரு பட்​டப்​படிப்பு கல்​வித் தகு​தி​யாக நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அதோடு பிளஸ் 2-வில் உயி​ரியல் பாடம் அல்​லது தாவர​வியல், விலங்​கியல் பாடங்​களை படித்​திருக்க வேண்​டும்.

5 ஆண்டு பணி அனுபவம்: பதவி உயர்வை பொருத்​தவரை​யில் கால்​நடை பராமரிப்​புத் துறை​யில் உதவி​யாளர்​களாக பணி​யாற்​று​வோர் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்று மேற்​குறிப்​பிட்ட கல்​வித் தகு​தியை பெற்​றிருந்​தால் பதவி உயர்​வுக்கு தகு​தி​யுடைய​வர் ஆவர். நேரடி நியமனம் மூல​மாகவோ அல்​லது பதவி உயர்வு வாயி​லாக கால்​நடை ஆய்​வாளர் பணிக்கு நியமிக்​கப்​படு​வோர் தகு​தி​காண் பரு​வத்​துக்​குள் 11 மாத கால கால்​நடை ஆய்​வாளர் பயிற்சி முடிக்க வேண்​டும். இவ்​வாறு அந்த அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x