Published : 06 Sep 2025 05:43 AM
Last Updated : 06 Sep 2025 05:43 AM

ஆவின் பாலில் கலப்படம்: அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் உட்பட 28 பேர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சி​யில் ஆவின் பாலில் கலப்​படம் செய்​த​தாக தென் சென்னை அதி​முக முன்​னாள் மாவட்​டச் செயலாள​ரான வைத்​தி​ய​நாதன் மற்​றும் அவரது மனைவி உள்​ளிட்​டோர் மீது பதி​யப்​பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2014-ம் ஆண்டு திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் இருந்து சென்​னைக்கு ஆவின் டேங்​கர் லாரி​களில் கொண்டு வரப்​பட்ட ஆவின் பாலை திருடி​விட்​டு, அதற்​குப் பதிலாக தண்​ணீரை கலப்​படம் செய்து மோசடி செய்​த​தாக அதி​முக அப்​போதைய தென் சென்னை மாவட்​டச் செய​லா​ள​ரான வைத்​தி​ய​நாதன், அவரது மனைவி ரேவதி உள்​ளிட்ட 28 பேர் மீது விழுப்​புரம் மாவட்​டம் வெள்ளிமேடு​பட்டி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

பின்​னர் இந்த வழக்கு விசா​ரணை விழுப்​புரம் மாவட்ட சிபிசிஐடி போலீ​ஸாருக்கு மாற்​றப்​பட்​டது. இந்த வழக்​கில் சிபிசிஐடி போலீ​ஸார் விழுப்​புரம் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​திருந்​தனர்.

வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை: இந்​நிலை​யில் தங்​கள் மீதான இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி வைத்​தி​ய​நாதன் மற்​றும் அவரது மனைவி ரேவதி உள்​ளிட்​டோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி என். சதீஷ்கு​மார் முன்​பாக நடந்​தது. மனு​தா​ரர்​கள் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் அபுடு​குமார் ராஜரத்​தினம் ஆஜராகி மனு​தா​ரர்​கள் மீதான குற்​றச்​சாட்​டு​களுக்கு எந்​தவொரு அடிப்​படை ஆதா​ர​மும் இல்​லை, என வாதிட்டார்.

அதே​போல அரசு தரப்​பில் ஆஜரான குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.எம்​.டி. முகிலன், இது தொடர்​பாக ஆவின் நிர்​வாகம் மேற்​கொண்ட விசா​ரணை​யில் எந்​தவொரு கலப்​பட​மும் நடை​பெற​வில்லை என்​றும், ஆவின் பால் திருடப்​பட​வில்லை என்​றும், டேங்​கர் லாரிக்கு வைக்​கப்​பட்​டிருந்த சீல் அகற்​றப்​பட​வில்லை என்​றும் அறிக்கை தாக்​கல் செய்​தார்.

எந்த ஆதாரமும் இல்லை: இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, இந்த வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட அனை​வர் மீதான குற்​றச்​சாட்​டு​களுக்​கும் எந்​தவொரு ஆதாரமும் இல்லை என்​றும், இந்த வழக்கை தொடர்ந்து விசா​ரிப்​ப​தால் எந்த பலனும் இல்லை எனக்​கூறி கடந்த 2014-ம் ஆண்டு பதி​யப்​பட்ட வழக்கை ரத்து செய்து உத்​தர​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x