Published : 06 Sep 2025 05:21 AM
Last Updated : 06 Sep 2025 05:21 AM

சென்னை நுங்கம்பாக்கத்தில் வாரந்தோறும் சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு

கோப்புப் படம்

சென்னை: சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் மகளிர் சுய உதவிக் குழுக்​கள் தயாரிக்​கும் பொருட்​களின் இயற்கை சந்தை இனி வாரந்​தோறும் சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் நடை​பெறும் என தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக அந்​நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மகளிர் சுய உதவிக் குழுக்​கள் உற்​பத்தி செய்​யும் பொருட்​களை நகரப் பகு​தி​யில் விற்​பனை செய்ய ஏது​வாக ஒவ்​வொரு மாத​மும் முதல் வார சனி, ஞாயிறு மற்​றும் மாதத்​தின் மூன்​றாம் வார சனி, ஞாயிற்​றுக்​கிழமை​களில் சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்​தில் சுய உதவிக் குழுக்​கள் தயாரிக்​கும் பொருட்​களின் இயற்கை சந்தை நடை​பெற்று வந்​தது.

இந்​நிலை​யில் வாடிக்​கை​யாளர்​களின் கோரிக்​கைக்கு ஏற்ப மகளிர் சுய உதவிக் குழுக்​களின் தயாரிப்​புப் பொருட்​களை கூடு​தலாக சந்​தைப்​படுத்​தும் வகை​யில் இனிவரும் நாட்​களில் சுய உதவிக் குழுக்​களின் இயற்கை சந்தை வாரந்​தோறும் சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் நடத்​தப்​பட​வுள்​ளது.

இதில் தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் செயல்​படும் மகளிர் சுய உதவிக் குழுக்​களால் உற்​பத்தி செய்​யப்​படும் இயற்கை சார்ந்த பொருட்​களான பாரம்​பரிய அரிசிகள், சிறு​தானி​யங்​கள் மற்​றும் சிறு​தானிய மதிப்​புக் கூட்​டுப் பொருட்​கள், காய்​கறிகள், கீரைகள், பழ வகைகள், பனை ஓலைப் பொருட்​கள் போன்​றவை விற்​பனை செய்​யப்​படும்.

அதே​போல் மகளிர் சுய உதவிக் குழுக்​களின் உறுப்​பினர்​களால் தயார் செய்​யப்​படும் பல்​சுவை உணவுப் பொருட்​களும் இயற்கை சந்​தை​யில் கிடைக்​கும். அந்த வகை​யில் இன்​றும் (சனிக்​கிழமை), நாளை​யும் (ஞா​யிற்​றுக்​கிழமை) நுங்​கம்​பாக்​கத்​தில் நடை​பெறும் இயற்கை சந்​தையை பொது​மக்​கள் அனை​வரும் பார்​வை​யிட்​டு, பொருட்​களை வாங்கி பயனடை​யு​மாறு கேட்​டுக்​கொள்​கிறோம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x