Published : 06 Sep 2025 07:18 AM
Last Updated : 06 Sep 2025 07:18 AM

செங்கோட்டையன் எண்ணம் நிறைவேறுவது அவசியம் - ஓ.பன்னீர்செல்வம் கருத்து; நயினார் நாகேந்திரன் வரவேற்பு 

தேனி / திருநெல்வேலி / தஞ்சாவூர் / திண்​டுக்​கல்: அதி​முக மீண்​டும் ஆட்சி அமைக்க வேண்​டும் என்​றால் செங்​கோட்​டையனின் எண்​ணம் நிறைவேற வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் கூறி​னார்.

தேனி மாவட்​டம் போடி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அதி​முக பிரிந்து கிடப்​ப​தால்​தான் தொடர் தோல்வி​களை சந்​தித்து வரு​கிறது. இந்​நிலை மாற வேண்​டும் எனில், அனை​வரை​யும் ஒருங்​கிணைக்க வேண்​டும். அதி​முக தொண்​டர்​களை யாராலும் வெளி​யேற்ற முடி​யாது.

மூத்த முன்​னோடி செங்​கோட்​டையன், எம்​ஜிஆர் காலத்​தில் இருந்தே உயர் பொறுப்​பு​களை வகித்​தவர். அதி​முக​வுக்கு அவர் ஆற்​றிய பணி அளப்​பரியது. தொண்​டர்​களை ஒருங்​கிணைத்​துச் செல்​பவர். அவரது கருத்து சரி​தான். அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்ற அனை​வரை​யும் ஒருங்​கிணைத்​தால்​தான் மீண்​டும் ஆட்சி அமைக்க முடி​யும். அவருடைய எண்​ணம் நிறைவேற வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம். நாங்​களும் தொடர்ந்து முயற்​சிப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

யாருடைய குரலும் இல்​லை... பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: செங்​கோட்​டையன் பேச்சு அதி​முக​வின் உட்​கட்சி விவ​காரம். யாருடைய குரலாக​வும் யாரும் பேச​வில்​லை. அதி​முக​வில் அனை​வரும் ஒற்​றுமை​யாக இருந்​தால் திமுக ஆட்​சியை நிச்​சய​மாக அகற்ற முடி​யும்.

அதி​முகவை ஒன்​றிணைக்க செங்​கோட்​டையன் எடுக்​கும் முயற்சி வரவேற்​கத்​தக்​கது. அதி​முக ஒன்​றிணைய வேண்​டும் என செங்​கோட்​டையன் சொல்​வது நல்ல விஷ​யம். அதி​முக இணைப்பு குறித்து பழனி​சாமி​தான் பேச வேண்​டும். தேவைப்​பட்​டால் நான் அவரோடு பேசுவேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதி​முக முன்​னாள் அமைச்​சரும், ஒரத்​த​நாடு எம்​எல்​ஏவு​மான ஆர்​.​வைத்​திலிங்​கம் தஞ்​சாவூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அதி​முக ஒன்​றாக இருக்க வேண்​டும் என்ற மனதுடன், செங்​கோட்​டையன் கூறியதை வரவேற்​கிறேன். செங்​கோட்​டையன் எங்​களு​டன் தொடர்​பில் இல்​லை.

அவர் பழனி​சாமி தலை​மையி​லான அதி​முக​வில்​தான் உள்​ளார். எனினும், செங்​கோட்​டையன் ஏற்​படுத்​தும் ஒன்​றிணைப்​புக் குழு​வுக்கு எங்​களை அழைத்​தால், நாங்​களும் செல்​வோம். ஒன்​றிணைப்​புக்கு தடை​யாக இருப்​பவர்​கள் மீது மக்​கள் கோப​மாக இருக்​கிறார்​கள்” என்​றார்.

பழனி​சாமிக்கு கட்​டுப்​படு​வோம்: அதி​முக முன்​னாள் அமைச்​சர் திண்​டுக்​கல் சி.சீனி​வாசன் திண்​டுக்​கல்​லில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறும்​போது, “அதி​முக​வில் அனை​வரும் ஒன்​றிணைய வேண்​டும் என்று செங்​கோட்​டையன் கூறியது குறித்து பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​தான் முடி​வெடுக்​கவேண்​டும். நாங்​கள் பழனிச்​சாமி​யின் கருத்துக்கு கட்​டுப்​படு​வோம். அவரது முடிவே எங்​கள் முடிவு” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x