Published : 05 Sep 2025 06:21 AM
Last Updated : 05 Sep 2025 06:21 AM

குரூப்​-1-ல் வெற்றி பெற்று டிஎஸ்​பி​யான ஆய்​வாளர்: காவல் ஆணை​யர் அருண் பாராட்டு

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வான ராமலிங்கத்தை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் அருண்.

சென்னை: சென்னை காவல் துறை​யில் உள்ள நவீன காவல் கட்​டுப்​பாட்டு அறை​யில் ஆய்​வாள​ராக பணி​யாற்​றிய​வர் ராமலிங்​கம். புதுக்​கோட்டை மாவட்​டம் கந்​தர்​வகோட்டை அடுத்த கள்​ளுப்​பட்​டியை சேர்ந்​தவர். இவர் கடந்த 2011-ல் நேரடி எஸ்​.ஐ.​யாக தேர்​வாகி நாகை, சென்​னை, ஆவடி உட்பட பல்​வேறு பகு​தி​களில் பணி​யாற்றி இந்த ஆண்​டில் ஆய்​வாள​ராக பதவி உயர்வு பெற்​றார்.

இந்​நிலை​யில், சமீபத்​தில் நடந்து முடிந்த குரூப்-1 தேர்​வில் வெற்றி பெற்று டிஎஸ்​பி​யாக தேர்​வாகி உள்​ளார். 6 முறை தோல்வி அடைந்து 7-வது முயற்​சி​யில் அவர் வெற்றி பெற்​றுள்​ளார். இதை அறிந்த காவல் ஆணை​யர் அருண், அவரை நேரில் அழைத்து பாராட்​டி​னார். நுண்​ணறிவு பிரிவு துணை ஆணை​யர் ராமமூர்த்தி உடனிருந்​தார். குரூப்-1 வயது வரம்பு 39 என உள்ள நிலை​யில் 38-வது வயதில் தேர்வு எழுதி வெற்றி பெற்​றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x