Published : 05 Sep 2025 05:47 AM
Last Updated : 05 Sep 2025 05:47 AM

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்ட பணிகளுக்கு ரூ.2,126 கோடி ஒதுக்கி அரசாணை

சென்னை: பூந்​தமல்லி - பரந்​தூர் வரையி​லான மெட்ரோ ரயில் நீட்​டிப்பு திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக பூந்​தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை நிலம் கையகப்​படுத்​தல் உள்​ளிட்ட ஆரம்​பக் கட்ட பணி​களை மேற்​கொள்ள ரூ.2,125.84 கோடிக்கு நிர்​வாக ஒப்​புதல் வழங்​கி, தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

சென்​னை​யில் தற்​போது 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இதற்கு பொது​மக்​கள் மத்​தி​யில் கிடைத்த நல்ல வரவேற்​பைத் தொடர்ந்​து, இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் மேற்​கொள்ள முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, 116.1 கி.மீ தொலை​வில் 3 வழித்​தடங்​களில் மெட்ரோ ரயில் திட்​டப்​பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த 3 வழித்​தடங்​களில், இரு வழித்​தடங்​களை நீட்​டிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அறிக்கை சமர்ப்பிப்பு: இவற்​றில் ஒரு வழித்​தட​மான கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித்​தடம், பரந்​தூர் வரை நீட்​டிக்​கப்பட உள்​ளது. இதற்​கான விரி​வானதிட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது. இதை 52.94 கி.மீ. தொலை​வுக்கு ரூ.15,906 கோடி செல​வில் செயல்​படுத்​த​வும், 20 உயர்த்​தப்​பட்ட மெட்ரோ நிலை​யங்​களை அமைக்​க​வும் திட்​ட​மிடப்​பட்​டது. இத்​திட்​டத்​துக்கு தமிழக அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. மேலும், மத்​திய அரசின் ஒப்​புதலுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் பூந்​தமல்லி - பரந்​தூர் மெட்ரோ ரயில் வழித்​தடத்​தின் ஒரு பகு​தி​யாக, பூந்​தமல்லி - சுங்​கு​வார்​சத்​திரம் வரை மெட்ரோ ரயில் திட்​டத்​தில் நிலம் கையகப்​படுத்​தல் உள்​ளிட்ட ஆரம்​பக் கட்ட பணி​களை மேற்​கொள்ள ரூ.2,125.84 கோடிக்கு நிர்​வாக ஒப்​புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. பூந்​தமல்லி - சுங்​கு​வார்​சத்​திரம் வரையி​லான 29.9 கி.மீ. தொலை​வுக்​கான முன்​மொழியப்​பட்ட நீட்​டிப்பு வழித்​தடத்​தில் ஆயத்​தப் பணி​களை மேற்​கொள்ள கருத்​துரு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

நிலம் கையகப்படுத்தல்: இந்த வழித்​தடத்​தில் நிலம் கையகப்​படுத்​தல், சாலைப் பணி, நிலப்​பரப்பு ஆய்​வு​கள், புவி தொழில்​நுட்ப ஆய்​வு, தடுப்​பு​கள் அமைத்​தல், மரம் வெட்​டு​தல், குடிமைப் பணி​கள் உட்பட பல்​வேறு ஆரம்​பக் கட்ட பணி​களை மேற்​கொள்ள ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​தகவல் தமிழக அரசின் அரசாணை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x