Published : 05 Sep 2025 06:30 AM
Last Updated : 05 Sep 2025 06:30 AM

பணியின்போது கண்டெடுத்த நகையை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: முதல்வர் பாராட்டு

தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளர் கிளாராவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புத்தாடை மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். துப்புரவுப் பணியாளர் கிளாராவின் கணவர் ராமச்சந்திரன், குழந்தைகள் சூசைமேரி, சுவாதி, நிக்கிதா ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை: தூய்​மைப் பணி​யின்​போது கண்​டெடுத்த நகையை நேர்​மை​யுடன் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்த பணி​யாள​ருக்கு முதல்வர் மு.க.ஸ்​டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். காசிமேட்​டைச் சேர்ந்​தவர் கிளாரா (39). சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்​மைப் பணி​யாள​ராக உள்​ளார்.

நேற்று முன்​தினம் (3-ம் தேதி) காலை திரு​வான்​மியூரில் உள்ள மருந்​தீஸ்​வரர் கோயில் திருமண மண்டப வளாகத்​தில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் நடை​பெற்​றது. அதன் பிறகு மாலை 5 மணி​யள​வில் அந்த பகு​தி​யில் தூய்​மைப் பணி நடை​பெற்​றது.

இந்த பணி​யில் கிளாரா ஈடு​பட்​டிருந்​தார். அவர் அங்​குள்ள கார் பார்க்​கிங் பகு​தியை சுத்​தம் செய்​த​போது, ஒரு பவுன் தங்​கச் சங்​கிலி கீழே கிடந்தது. அதை எடுத்து மேற்​பார்​வையாளரிடம் ஒப்​படைத்​தார். பின்​னர் திரு​வான்​மியூர் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, போலீ​ஸார் நகையைத்தவற​விட்​ட​வரை கண்​டறிந்து அவரிடம் ஒப்​படைத்​தனர். தங்கம் விலை உச்​சத்​தில் உள்ள கால​கட்​டத்​தில் ஏழ்மை நிலை​யிலும் நேர்​மை​யாகச் செயல்​பட்ட தூய்​மைப் பணி​யாளர் கிளாராவை பலரும் வெகு​வாகப் பாராட்டினர்.

சமூக வலைதள பதிவு: இந்​நிலை​யில், கிளா​ரா​வின் நேர்​மை​யைப் பாராட்டி தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள சமூக வலை​தளப் பதிவு: தூய்​மைப் பணி​யின்​போது கண்​டெடுத்த தங்​கச் சங்​கி​லியை நேர்​மையோடு போலீ​ஸில் சகோ​தரி கிளாரா ஒப்​படைத்த செய்​தி​யைப் பார்த்து நெகிழ்ந்​தேன். எளிய​வர்​கள் எப்​போதும் நேர்​மை​யின் பக்​கம்​தான் என்ப​தற்கு மற்​றும் ஒரு எடுத்​துக்​காட்​டாக மின்​னும் தங்கை கிளா​ரா​வுக்கு எனது அன்​பும் பாராட்​டு​களும். இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

புத்தாடை, வெகுமதி: இதுஒரு​புறம் இருக்க, துப்​புரவு பணி​யாளர் கிளா​ராவை குடும்​பத்​துடன் தனது முகாம் அலு​வல​கத்துக்கு அழைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கிளா​ரா​வின் நேர்​மையை பாராட்​டி​னார். மேலும் அவருக்கு புத்​தாடை​யும், தி.​மு.க இளைஞரணி அறக்​கட்​டளை​யின் சார்​பில் வெகும​தி​யும் வழங்கி அவரது நேர்​மை​யான பணிக்கு வாழ்த்து தெரி​வித்​தார். அதோடு மட்​டும் அல்​லாமல் துப்​புரவு பணி​யாளர் கிளா​ரா​வின் குடும்​பத்​தினருடன் துணை முதல்​வர் உரை​யாடி​னார்.

அப்​போது, லண்​டனில் இருந்து முதல்​வர் ஸ்டா​லின் என்னை அழைத்​து, பாராட்டு தெரிவிக்​கு​மாறு தொலைபேசி​யில் தெரி​வித்​தார் என்​றும், தமிழகம் திரும்​பியதும், உங்​களை நேரில் சந்​திக்க ஆர்​வ​மாக இருப்​ப​தாக​வும், கிளாரா குடும்​பத்​தினரிடம்​ உதயநி​தி ஸ்டா​லின்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x