Published : 05 Sep 2025 06:59 AM
Last Updated : 05 Sep 2025 06:59 AM

டெல்டா உட்பட 6 மாவட்டங்களில் செப்.8-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தஞ்​சாவூர், சிவகங்​கை, ராம​நாத​புரம் உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் செப்​.8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு:

வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகு​தி, மேற்​கு, வடமேற்​காக நகர்ந்து நேற்று அதி​காலை 5.30 மணி அளவில் காற்​றழுத்த தாழ்வு பகு​தி​யாக வலுகுறைந்​து, வடக்கு சட்​டீஸ்​கர் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களில் நில​வியது.

இதற்​கிடையே, மேற்கு திசை காற்​றின் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று முதல் செப்​.7-ம் தேதி வரை இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ராம​நாத​புரம், சிவகங்​கை, புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் 8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று அதி​கபட்ச வெப்​பநிலை 2-3 டிகிரி செல்​சி​யஸ் வரை இயல்​பை​விட அதி​க​மாக இருக்​கக்​கூடும்.

சென்​னை​யில் இன்று வானம் ஓரளவு மேக மூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. வெப்​பநிலை 27 டிகிரி முதல் 35 டிகிரி செல்சி​யஸ் வரை இருக்​கக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக நீல​கிரி மாவட்​டம் பார்​வூட், விண்ட்​வொர்த் எஸ்​டேட், மதுரை மாவட்​டம் தனி​யாமங்​கலத்​தில் அதி​கபட்​ச​மாக 3 செ.மீ. மழை பதி​வானது. மதுரை வி​மான நிலை​யத்​தில் 39 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை பதி​வானது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x