Published : 05 Sep 2025 06:33 AM
Last Updated : 05 Sep 2025 06:33 AM

தீபாவளி பண்டிகை: 11 சிறப்பு ரயில்கள்

சென்னை: தீ​பாவளியை முன்​னிட்டு 11 சிறப்பு ரயில்​களை இயக்க பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறியதாவது:

தீபாவளி பண்​டிகைக்​காக சென்​னை​யில் இருந்து புறப்​படும் விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு ஏற்​கெனவே முடிந்​து​விட்​டது. முக்​கிய ரயில்​களில் காத்​திருப்​போர் எண்​ணிக்கை 1,000 வரை பதி​வாகி​யுள்​ளது. எந்​தெந்த ரயில்​களுக்கு தேவை அதி​க​மாக உள்​ளது என்று ஆய்வு செய்​து, அதற்​கேற்ப சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன.

அந்த வகை​யில், சென்னை சென்ட்​ரலில் இருந்து கோவை, கன்​னி​யாகுமரி, நாகர்​கோ​வில், செங்​கோட்​டை, திரு​வனந்​த​புரம், எர்​ணாகுளம், எழும்​பூரில் இருந்து திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, தாம்​பரத்​தில் இருந்து நாகர்​கோ​வில், செங்​கல்​பட்​டில் இருந்து திருநெல்​வேலி உட்பட 11 சிறப்பு ரயில்​களை இயக்க பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. பரிசீலனைக்கு பிறகு, சிறப்பு ரயில்​கள் குறித்​து அறிவிக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x