Published : 05 Sep 2025 06:05 AM
Last Updated : 05 Sep 2025 06:05 AM

பொதுச் செயலாளராக தேர்வு: இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டது சட்​ட​விரோதம் என்று அறிவிக்​கு​மாறு தொடரப்​பட்ட வழக்கை உயர் நீதி​மன்​றம் நிராகரித்​துள்​ளது.

2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதி​முக பொதுக்​குழு தீர்​மானங்​களை எதிர்த்​தும், பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டது செல்​லாது என்று அறிவிக்க கோரி​யும், திண்​டுக்​கல் மாவட்​டத்தை சேர்ந்த சூரியமூர்த்​தி, சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி பழனி​சாமி தாக்​கல் செய்த மனுவை உரிமை​யியல் நீதி​மன்​றம் ஏற்க மறுத்​து, கடந்த ஜூலை மாதம் தள்​ளு​படி செய்​தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பழனி​சாமி மேல்​முறை​யீடு செய்​தார்.

நீதிபதி பி.பி.​பாலாஜி முன்​னிலை​யில் இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. பழனி​சாமி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய​நா​ராயணன், “வழக்கு தொடர்ந்​துள்ள சூரியமூர்த்தி அதி​முக உறுப்​பினரே இல்லை என்​ப​தால், உட்​கட்சி விவ​காரங்​கள் தொடர்​பாக வழக்கு தொடர அவருக்கு உரிமை இல்​லை. இதே கோரிக்கை தொடர்​பான வழக்​கு​களை ஏற்​கெனவே உயர் நீதி​மன்​ற​மும், உச்ச நீதி​மன்​ற​மும் விசா​ரித்து உத்​தர​விட்​டுள்​ளது. மீண்​டும் அதே கோரிக்​கையை மனு​தா​ரர் எழுப்​பி​யுள்​ளார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை உரிமை​யியல் நீதி​மன்​றம் சரிவர கவனத்​தில் கொள்​ளாமல் தள்​ளு​படி செய்​துள்​ளது” என்​றார்.

சூரியமூர்த்தி தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்​.வேல்​முரு​கன், “சூரியமூர்த்தி ரூ.10 செலுத்தி உறுப்​பினர் அட்​டையை புதுப்​பிக்​க​வில்லை என்​ப​தற்​காக, அவர் உறுப்​பினரே இல்லை என்று கூற​முடி​யாது. கட்சி விதி​களின்​படி அவர் அடிப்​படை உறுப்​பின​ராக நீடிக்​கிறார். அதி​முக அடிப்​படை உறுப்​பினர்​களால்​தான் பொதுச் செய​லா​ளர் தேர்ந்​தெடுக்​கப்பட வேண்​டும் என்ற விதியை இஷ்டம்​போல மாற்ற முடி​யாது. கட்​சி​யின் அடிப்​படை விதி​களுக்​கு புறம்​பாக பொதுச் செய​லா​ளர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​தா​லும், பொதுக்​குழு தீர்​மானங்​களும் கட்சி விதி​களுக்கு அப்​பாற்​பட்டு இருப்​ப​தா​லும் அவற்றை செல்​லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது” என்​றார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி பாலாஜி நேற்று பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தரப்​பில் முன்​வைக்​கப்​பட்​டுள்ள வாதங்​கள் ஏற்​புடைய​தாக இருக்​கின்​றன. எனவே, சூரியமூர்த்​தி​யின் வழக்கை நிராகரிக்​கு​மாறு அவர் தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உரிமை​யியல் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​கிறேன். அதே​போல, அதி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டதை எதிர்த்து சூரியமூர்​த்​தி உரிமையியல்​ நீதிமன்​றத்​தில்​ தொடர்​ந்​துள்​ள வழக்​கையும்​ நி​ராகரித்​து உத்​தரவிடுகிறேன்​. இவ்​வாறு உத்​தரவில்​ நீதிபதி தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x