Published : 04 Sep 2025 06:32 AM
Last Updated : 04 Sep 2025 06:32 AM

தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பிவிடாது: துணை முதல்வர் உதயநிதி கருத்து

சென்னை: மக்​களிடையே குழப்​பத்தை ஏற்​படுத்த ஒரு கும்​பல் பொய்யை மட்​டுமே பரப்பி வரு​வ​தாக​வும், ஆனால் தமிழகம் மற்ற மாநிலங்​களை போல எதை​யும் உடனே நம்​பாது என்​றும் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

ஊடக சவால்​களை எதிர்​கொள்​வது குறித்து நாட்டு நலப்​பணித்​திட்ட மாணவர்​களுக்கு மாநில அளவி​லான 3 நாள் பயிற்சி பட்டறை சென்னையில் நடை​பெற்​றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடந்​தது.

அதில் கலந்து கொண்ட துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் பேசி​ய​தாவது: சமூக ஊடகங்​கள் பெரு​கி​யுள்ள இந்த காலகட்டத்தில், மிகப்​பெரிய அளவில் பொய்​யான செய்​தி​களும், வதந்​தி​களும் பரப்​பப்​பட்டு வரு​கின்​றன. வதந்​தி​களைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் உண்​டு. ஒன்று எந்த உள்​நோக்​க​மும் இல்​லாமல் பரவு​கிற பொய் செய்​தி​கள். மற்​றொன்று திட்ட​மிட்​டு, உள்​நோக்​கத்​ தோடு பரப்​பப்​படு​கிற செய்​தி​கள்.

இதில் இரண்​டாம் வகை மிக, மிக ஆபத்​தானது. போலி செய்​தி​கள் மட்​டுமல்ல, வெறுப்​பு பேச்சும் பெரிய அளவில் நம் நாட்டை பாதித்து வரு​கின்​றன.குறிப்​பாக, சிறு​பான்​மை​யின மக்​கள், ஒடுக்​கப்​பட்ட மக்​கள், வெறுப்​புப் பேச்​சால் மிக​வும் பாதிக்​கப்​படு​கிற சூழல் நிலவி வரு​கிறது.

மக்​களிடையே குழப்​பத்தை ஏற்​படுத்​த​வும், அறிவை மழுங்க செய்​யும் நோக்​கத்​துட​னும் பொய்​யான கதைகளை அவிழ்த்து விட்டு​க் கொண்டே இருக்​கின்​றனர். 2 ஆண்​டு​களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்​றில் நான் பேசும்​போது, ‘பிறப்​பால் ஏற்​றத்​தாழ்வு சொல்கின்ற எந்த விஷ​யத்​தை​யும் அழிக்​கணும்’ என்று சொன்​னேன்.

அதை திரித்​து, நான் சொல்​லாத விஷ​யங்​களை​யும் சொன்​ன​தாக நாடு முழு​வதும் பரப்​பி​விட்​டனர். அதற்​காக, என் தலையை சீவினால் ரூ.10 லட்​சம் தரு​கிறேன் என ஒரு சாமி​யார் சொன்​னார். மற்ற மாநிலங்​களைப்​போல் தமிழகம் எதை​யும் உடனே நம்பாது.

இது பெரி​யா​ரால் பண்​படுத்​தப்​பட்ட மண். இதையொட்​டியே தமிழக அரசின் சார்​பில் பிரத்​யேக உண்மை சோதனை பிரிவு தொடங்​கப்​பட்​டது. இன்​றைக்கு இந்த பிரி​வின் வேகத்தை பார்த்து தவறான தகவல்​கள் பரப்​பு​கின்ற கும்​பல் கதறி கொண்டிருக்கின்​றனர். இதனால் சமீப கால​மாக தவறான தகவல்​கள் பரப்​பப்​படு​வது தமிழகத்​தில் மிக​வும் குறைந்​துள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில், விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, சிறப்​புத்​திட்ட செய​லாக்​கத் துறை செயலர் பிரதீப் யாதவ், கல்லூரிக் கல்வி இயக்​குநரக ஆணை​யர் சுந்​தர​வல்​லி, விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாத ரெட்​டி, தகவல் சரி​பார்​ப்​பகம் இலக்கு இயக்​குநர் ஐயன் கார்​த்​தி​கேயன், நாட்டு நலப்​பணித் திட்ட மாநில ஒருங்​கிணைப்​​பாளர் குணாநிதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x