Published : 04 Sep 2025 05:59 AM
Last Updated : 04 Sep 2025 05:59 AM

குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: குரோம்பேட்​டை, பல்​லா​வரம் பகு​தி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட காரண​மான கால்​வாய்​களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு​மை​யாக அகற்​றக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், இதுதொடர்​பாக செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, டேவிட் மனோகர் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “குரோம்​பேட்​டை, பல்​லா​வரம் மற்​றும் ஜிஎஸ்டி சாலை பகு​தி​களில் மழை காலங்​களில் கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு ஏற்​படு​கிறது. சாலை​யோர கால்​வாய்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முறை​யாக அகற்​றாததும், குப்​பைகளை கொட்​டும் இடங்​களாக மாற்​றி​யிருப்​பதும் முக்​கிய காரணம். பெரும்​பாலான இடங்​களில் மழைநீர் வடி​கால் வசதி​யும் இல்​லை.

பல்​லா​வரம் பெரிய எரி​யில் இருந்து வெளி​யேறும் தண்​ணீர் குரோம்​பேட்டை வெற்றி தியேட்​டருக்கு எதிரே செல்​லும் கால்​வாய், தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனை அருகே செல்​லும் கால்​வாய், பல்​லா​வரம் பாண்ட்ஸ் சிக்​னல் அருகே செல்​லும் கால்​வாய் ஆகிய​வற்​றின் மூலம் வெளி​யேறும் சூழலில் இந்த கால்​வாய்​கள் ஆக்​கிரமிக்​கப்​பட்​டுள்​ள​தால், மழைநீர் செல்ல வழி​யின்றி சாலைகளில் வழிந்​தோடி தாழ்​வான பகு​தி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​படு​கிறது.

எனவே, மழைக்​காலம் நெருங்​கும் முன்​பாக இப்​பகு​தி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்ற வேண்​டும் என மாவட்ட ஆட்​சி​யர், தமிழக அரசின் முதன்மை செயலர், பொதுப்​பணித்​துறை செயலர் உள்​ளிட்​டோருக்கு மனு அனுப்​பி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை” என, அதில் கூறி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஒய்​.க​விதா ஆஜராகி வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் உள்​ளிட்ட அதி​காரி​கள் 3 வார காலத்​தில் பதிலளிக்க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x