Published : 04 Sep 2025 05:37 AM
Last Updated : 04 Sep 2025 05:37 AM

மீலாது நபி தினத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

சென்னை: முஸ்​லிம்​களின் முக்​கியப் பண்​டிகை​களில் ஒன்​றான மீலாது நபி நாளை (செப்​.5) கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை விதி மற்​றும் தமிழ்​நாடு மது​பான விதி​களின் கீழ் சென்​னை​யில் உள்ள அனைத்து டாஸ்மாக், மது​பான சில்​லறை விற்பனை கடைகள் மற்​றும் பார்​கள், கிளப்பார்​கள், ஓட்​டல் பார்கள், மதுபான விற்பனையகங்கள், மது​பானக்கூடங்​கள் போன்​றவற்​றில் நாளை மது​பானம் விற்​பனைசெய்​யக்​கூ​டாது.

அனைத்து மது விற்​பனை கடைகளும் மூடப்​பட்​டிருக்க வேண்​டும். இதை மீறி​னால் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்சரித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x