Published : 04 Sep 2025 06:10 AM
Last Updated : 04 Sep 2025 06:10 AM

மழைநீரை சேமிக்க ரூ.160 கோடி செலவில் சென்னையில் 70 குளங்கள் புனரமைப்பு, 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைப்பு

கோப்புப் படம்

சென்னை: சென்​னை​யில் மழைநீரை சேமிக்​கும் வகை​யில் ரூ.159.08 கோடி​யில் 70 குளங்​கள் புனரமைக்​கப்​பட்​டு, 88 மழைநீர் உறிஞ்​சும் பூங்​காக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இது தொடர்​பாக பெருநகர சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாநக​ராட்​சி​யில் பரு​வ​மழையை முன்னிட்டு ஆறுகள், குளங்​கள், கால்​வாய்​களை தூர்​வாரி அதன் கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​துதல், மழைநீர் வடி​கால்வாய்களை அமைத்​தல், மழைநீர் வடி​கால்​வாய்​களில் தூர்​வாரும் பணி உள்​ளிட்​டவை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அதே ​போல் குடி​யிருப்​புப் பகு​தி​களில் மழைநீர் தேங்​கு​வதைத் தடுத்து அதைச் சேமிக்​கும் வகை​யில் ஜெர்​மன் தொழில்​நுட்​பத்​தில் விளை​யாட்டு மைதானங்​கள், பூங்​காங்​கள், மழைநீர் சேகரிப்பு கட்​டமைப்​பு​கள் ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில் சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் 70 குளங்​கள் ரூ.144.34 கோடி​யில் புனரமைக்​கப்​பட்​டுள்​ளன. பூங்​காக்​களில் தேங்​கும் மழைநீரை முழு​மை​யாக சேமிக்​கும் வகை​யில் சிங்​காரச் சென்னை 2.0 திட்​டத்​தின் கீழ் ரூ.14.74 கோடி​யில் 88 மழைநீர் உறிஞ்​சும் பூங்​காக்​கள் அமைக்​கும் பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இந்​திய சுற்​றுச்​சூழல் அறக்​கட்​டளை சார்​பில் தென்​சென்னை பகு​தி​யில் 22 குளங்​களில் மேம்​பாட்​டுப் பணி​கள் நடை​பெற்று வரும் நிலை​யில், மேலும் புதி​தாக 41 குளங்​களில் ரூ.119.42 கோடி மதிப்​பீட்​டில் மேம்​பாட்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. கிண்டி ரேஸ் கிளப் வளாகத்​தில்கடந்த ஆண்​டில் 4 புதிய குளங்​கள் அமைக்​கப்​பட்​டு, அதன் கொள்​ளளவை இரட்​டிப்​பாக்க பணி​கள் நடந்து வரு​கின்​றன.

இதற்​கிடையே எம்​.ஆர்​.டி.எஸ். பகு​தி​யில் சிக்​ஸ்​வென்ட் கல்​வெர்ட் அரு​கில் கடந்த ஆண்​டில் 2 குளங்​கள் புதி​தாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளதும் குறிப்​பிடத்​தக்​கது. இதன் காரண​மாக பரு​வ​மழைக் காலங்​களில் அதிக அளவில் மழைநீரை சேமித்து சாலை மற்​றும் குடி​யிருப்​புப் பகு​தி​களில் மழைநீர் தேக்​கத்தை தவிர்க்க முடி​யும். மழைநீரை நிலத்​தடி​யில் சேமிக்​க​வும் சிறப்​பான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x