Published : 04 Sep 2025 06:11 AM
Last Updated : 04 Sep 2025 06:11 AM

ரூ.1,964 கோடியில் விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்: தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: சென்னை விமான ​நிலை​யம் - கிளாம்​பாக்​கம் மெட்ரோ ரயில் விரி​வாக்​கத் திட்​டத்​தில், நிலம் கையகப்​படுத்​துதல் மற்றும் பிற பணி​களுக்காக, ரூ.1,964 கோடிக்கு ஒப்​புதல் வழங்​கி, தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. சென்​னை​யில் தற்​போது 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இதையடுத்​து, விமான ​நிலை​யம் - கிளாம்​பாக்​கம் வரை 15.5 கி.மீ. வரை மெட்ரோ ரயில் விரி​வாக்​க திட்​டம் அறிவிக்​கப்​பட்​டு, நீண்​ட​கால​மாக ஒப்​புதல் கிடைக்​காமல் இருந்து வந்​தது. அதே​நேரத்​தில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது. தற்​போது, இத்​திட்​டம் 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது.

மேலும், இந்த 3 வழித்​தடங்​களில் 2 வழித்​தடங்​கள் விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்​யப்​பட்​டு, விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டு, மத்​திய அரசின் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது. கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் பயன்​பாட்​டுக்கு வந்​த​தில் இருந்து விமான நிலை​யம் - கிளாம்​பாக்​கம் மெட்ரோ ரயில் விரி​வாக்​கம் திட்​டத்தை செயல்​படுத்த கோரிக்கை வலுத்​தது. இதையடுத்​து, இத்​திட்​டம் தொடர்​பாக விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டு, மாநில அரசின் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்​டது.

இத்​திட்​டத்தை செயல்​படுத்த ரூ.9.445 கோடி செல​வாகும் எனவும், 13 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமை​யும் எனவும் திட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு மாநில அரசு ஒப்​புதல் அளித்​து​விட்​டது. தொடர்ந்​து, மத்​திய அரசின் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், இந்த விரி​வாக்​கத் திட்​டத்​தில், நிலம் கையகப்​படுத்​துதல் மற்​றும் பிற பணி​களுக்​காக, ரூ.1,963.63 கோடிக்கு நிர்​வாக ஒப்​புதல் அளித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

முன்​மொழியப்​பட்ட திட்​டத்​திற்​கான நிலம் கையகப்​படுத்​தல் செயல்​முறையைத் தொடர​வும், பயன்​பாட்டு மாற்​றம் மற்​றும் பிற ஆயத்​தப் பணி​களை மேற்​கொள்​ள​வும் அரசு அனு​மதி அளித்​துள்​ளது. நிலம் கையப்​படுத்​தல், சாலை பணி, நிலப்​பரப்பு ஆய்​வு உட்பட பல்​வேறு பணி​கள் ரூ.1,963.63 கோடி செல​வில் மேற்கொள்ள அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்ளது என தமிழக அரசு வெளி​யிட்ட அரசாணை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x