Published : 04 Sep 2025 06:03 AM
Last Updated : 04 Sep 2025 06:03 AM

பிரதமர் தாய் குறித்த அவதூறுக்கு பாஜக, தமாகா கண்டனம் 

சென்னை: பிரதமரின் மறைந்த தாய் குறித்த அவதூறு கருத்​துக்கு பாஜக, தமாகா ஆகிய கட்​சிகள் கடும் கண்​டனம் தெரிவித்துள்ளன.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: பிரதமர் மற்​றும் அவரது மறைந்த தாயார் குறித்​து முகமது ரிஸ்வி எனும் காங்​கிரஸ் ஆதர​வாளர் அவதூறாகப் பேசி​யிருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது.

ஒரு​வரை அரசி​யல்​ரீ​தி​யாகத் தாக்க அவரது தாயை இழி​வுபடுத்தி ஆனந்​தமடை​யும் குரூரப் போக்கு எவ்​வளவு கொடூர​மானது. பெண் என்​றால் அவ்​வளவு இளக்​கார​மா? வயதான பெண்​களை கட்​சிக் கூட்​டத்​தில் இழி​வுபடுத்​தி​யதை எதிர்த்​துக் குரல் கொடுக்காத இந்த இண்​டியா கூட்​ட​ணி​யினர் தான் நம் இந்​திய மகள்​களை​யும் பாரதத் தாயை​யும் காக்​கப் போகிறார்​களா? இச்​சம்​பவத்​துக்கு உடனடி​யாக இண்​டியா கூட்​ட​ணித் தலை​வர்​கள் வருத்​தம் தெரி​வித்து நாட்​டின் அனைத்​துப் பெண்​களிட​மும் மன்​னிப்பு கேட்க வேண்​டும்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: பிரதமர் நரேந்​திர மோடி​யின் தாயார் குறித்து எதிர்க்​கட்​சி​யினர் அவதூறாக பேசி​யது கண்​டிக்​கத்தக்​கது. முற்​றி​லும் தவறானது. இப்​படி ஒரு அவதூறான கருத்தை தெரி​வித்​ததை ஆர்​.ஜே.டி தலை​வரும், காங்​கிரஸ் தலை​வரும் கண்​டிக்​காதது அரசி​யல் அநாகரி​கத்தை எடுத்​துக்​காட்​டு​கிறது.

தெய்​வத்​துக்கு சமமாக நினைக்​கும் மறைந்த தாயாரை, மறைந்த தலை​வர்​களை பற்றி தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது அவதூறாக பேசுவது ஏற்​றுக்​கொள்​ளப்​பட​மாட்​டாது. இந்த அநாகரி​க​மான போக்கை கண்​டிக்​கிறேன்​. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x