Published : 04 Sep 2025 05:20 AM
Last Updated : 04 Sep 2025 05:20 AM

பொன்முடியின் சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ தொகுப்பு நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி பேசிய பேச்​சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தார். இதையடுத்​து, இந்த வழக்கு விசா​ரணையை உயர் நீதி​மன்​றம் தள்ளி வைத்​துள்​ளது.

சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி ஒரு விழா​வில் பேசிய பேச்சு சர்ச்​சைக்கு உள்​ளானது. இதனால் பொன்​முடி பதவியை இழந்​தார். மேலும், பொன்​முடிக்கு எதி​ராக 140-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் போலீ​ஸில் அளிக்​கப்​பட்​டன. அத்​துடன் உயர் நீதி​மன்ற நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷும், பொன்​முடிக்கு எதி​ராக தாமாக முன்​வந்து வழக்கை விசா​ரணைக்கு எடுத்​தார்.

இந்த வழக்கை கடந்த முறை விசா​ரித்த நீதிபதி என்​.சதீஷ்கு​மார், சைவம், வைணவம் மற்​றும் பெண்​களை தொடர்​புபடுத்தி பொன்​முடி பேசிய முழு வீடியோ தொகுப்​பை​யும், அவர் மேற்​கோள் காட்டி பேசி​ய​தாக கூறப்​படும் 1972-ம் ஆண்​டுக்​கான ஆதா​ரத்​தை​யும் அரசுத்தரப்​பில் தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டு, விசா​ரணையை தள்ளி வைத்​திருந்​தார்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி என்​.சதீஷ்கு​மார் முன்​னிலை​யில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, பொன்​முடி பேசிய பேச்​சின் முழு வீடியோ தொகுப்​பை​யும், அவர் மேற்​கோள் காட்டி பேசி​ய​தாக கூறப்​படும் 1972-ம் ஆண்​டுக்​கான ஆதா​ரத்​தை​யும் தாக்​கல் செய்​தார். அதையடுத்து நீதிப​தி, இந்த ஆவணங்​களை பார்த்​து​விட்டு வழக்கை வி​சா​ரிக்க விரும்​புவ​தாகக் கூறி, வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x