Published : 03 Sep 2025 05:57 AM
Last Updated : 03 Sep 2025 05:57 AM

ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை விரிவாக்கம்: திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்

கோப்புப்படம்

சென்னை: ஒக்​கி​யம் மடுவு நீர்​வழிப் பாதை​யில் நடை​பெறும் விரி​வாக்​கப் பணி​களை ஆய்வு செய்த சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் எம்​.ஏ.சித்​திக், பணி​களை திட்​ட​மிட்ட காலத்​துக்கு முன்பே முடிக்க இலக்கு நிர்​ண​யித்​துள்​ள​தாக தெரி​வித்​தார்.

கடந்த 2023-ல் ‘மிக்​சாம்’ புய​லால் ஏற்​பட்ட வெள்​ளத்தை அடுத்​து, அதிக மழைப்​பொழி​வைத் தாங்​கும் திறன் இல்​லாத நிலை​யில் ஒக்​கி​யம் மடுவு பாலம் இருந்​தது தெரிந்​தது. அதாவது இந்த நீர்​வழிப்​பாதை 90 மீட்​டர் அளவிலும், குறைந்த உயரம் கொண்​ட​தாக​வும் இருந்​தது.

இதனைச் சரி செய்​யும் பொருட்டு தமிழக அரசு மற்​றும் நீர்​வளத் துறை​யுடன் கலந்​தாலோ​சித்த பிறகு, நீர்​வழிப்​பாதையை 205 மீட்​ட​ராக​வும், கூடு​தலாக 1.5 மீட்​டர் உயரத்தை அதி​கரிக்​க​வும் முடிவு செய்​தது. அதன்​படி, ஒக்​கி​யம் மடுவு பாலத்​தின் விரி​வாக்​கப் பணி​களை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் மேற்​கொண்டு வரு​கிறது. தற்​போது 90 மீட்​ட​ராக இருந்த நீர்​வழிப் பாதை, 120 மீட்​ட​ராக மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், இப்​பணி​கள் நிறைவு பெற்​றவுடன், பாலத்​தின் முழு அளவு 205 மீட்​ட​ராக இருக்​கும்.

80 சதவீத பணி நிறைவு: பாலத்​தின் 3 நீர்​வழிப்​பாதைகளும் கட்டி முடிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, பாலத்​தின் மேல்​பக்க நீர்​வழிப்​பாதை முழு​மை​யாக சுத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் கீழ்ப்​புற நீர்​வழிப்​பாதை​யில் 80 சதவீதம் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. மீத​முள்ள பகு​தி​கள் செப்​. 8-ம் தேதி வாக்​கில் சுத்​தம் செய்​யப்​படும்.

பாலம் அமைக்​கும் பணி​கள் இரு​புற​மும் நடை​பெறுகின்​றன. பாலம் கட்டி முடிக்​கப்​பட்​டதும், புதிய பாலம் பொது பயன்​பாட்​டுக்​காக தற்​போதைய சாலை​யுடன் இணைக்​கப்​படும். இந்​நிலை​யில் ஒக்​கி​யம் மடுவு நீர்​வழிப் பாதை​யில் நடை​பெறும் பணி​களை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் எம்​.ஏ.சித்​திக் ஆய்வு செய்​தார்.

இந்த ஆய்​வின்​போது, திட்ட இயக்​குநர் தி.அர்ச்​சுனன், பொது மேலா​ளர் (வழித்​தடம்) செல்​வம் மற்​றும் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் உயர் அலு​வலர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் உடனிருந்​தனர். ஆய்​வின்​போது, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் எம்​.ஏ.சித்​திக் கூறிய​தாவது:

வெள்ள அபாயம் குறையும்: ஒக்​கி​யம் மடுவு நீர்​வழிப் பாதை திட்​ட​மிடப்​பட்ட காலத்​துக்கு முன்பே முடிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது இரவு பகலாகப் பணி நடை​பெற்று வரு​கிறது. பணி​கள் முடிந்​ததும், இந்த பாலம் நீரின் ஓட்​டத்தை குறிப்​பிடத்​தக்க வகை​யில் மேம்​படுத்​தும். மேலும் அரு​கிலுள்ள பகு​தி​களில் வெள்ள அபா​யத்​தைக் குறைத்​து, பள்​ளிக்​கரணை மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வசிக்​கும் மக்​களுக்கு வெள்​ளப் பா​திப்​பு​களி​லிருந்து தீர்​வை அளிக்​கும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x