Published : 03 Sep 2025 06:11 AM
Last Updated : 03 Sep 2025 06:11 AM

தூண் தளம், 2 தளம் கொண்ட குடியிருப்புகளுக்கு இன்று முதல் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி விரிவாக்கம்

சென்னை: தூண் தளம் மற்​றும் இரண்டு தளம் கொண்ட குடி​யிருப்பு கட்​டிடங்​களுக்​கும் சுய​சான்று அடிப்​படை​யில் ஒற்றை சாளர முறை​யில் உடனடி ஒப்​புதல் பெறும் திட்​டம் இன்று முதல் நடை​முறைக்கு வரு​கிறது.

இதுகுறித்து நகர மற்​றும் ஊரமைப்பு இயக்​ககம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தலை​மைச் செயல​கத்​தில், வீட்​டு​வசதி மற்​றும் நகர்​புற வளர்ச்​சித் துறை​யின்​கீழ் இயங்​கும் நகர் ஊரமைப்பு இயக்​ககத்​தின் சார்​பில், தமிழகத்​தில் முதல்​முறை​யாக பொருளா​தா​ரத்​தில் நலிவடைந்த பிரி​வினர் மற்​றும் நடுத்தர மக்​கள் ஆகியோர் இணை​யதளம் வாயி​லாக சுய​சான்​றிதழ் அடிப்​படை​யில் பயன் பெறும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, அதி​கபட்​சம் 2,500 சதுர அடிபரப்​பளவு கொண்ட மனை​யிடத்​தில் 3,500 சதுர அடி அளவுக்​குள் கட்​டப்​படும் தரைத்​தளம் மற்​றும் முதல் தளம் கொண்ட 7 மீட்​டர் வரை​யுள்ள குடி​யிருப்பு கட்​டு​மானத்​துக்கு உடனடி​யாக ஒற்​றைச்​சாளர முறை​யில் கட்​டிட அனு​ம​தி​களைப் பெறும் ஒரு ஒருங்​கிணைந்த புதிய திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்​தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்​தார். தற்​போது இத்​திட்​டத்​தின் மூலம் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயனடைந்​துள்​ளனர்.

இத்​திட்​ட​மானது மக்​களிடம் பெறும் வரவேற்​பைப் பெற்​றிருக்​கும் நிலை​யில் இத்​திட்​டத்தை மேலும் பயனுள்​ள​தாக்க 2025–26-ம் ஆண்​டுக்​கான நிதி​நிலை அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​வாறு, வாகன நிறுத்​து​வதற்​கான சவால்​களை எதிர்​கொள்​ளும் வகை​யில் தூண் தளம் மற்​றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) கொண்ட 10 மீட்​டர் வரை​யுள்ள குடி​யிருப்பு கட்​டிடங்​களுக்​கும் இத்​திட்​டத்​தின்​கீழ் பதிவுசெய்து உடனடி​யாக கட்​டிட அனு​மதி பெறு​வதற்கு கூடு​தல் வசதி இன்​று​முதல் நடை​முறைப்​படுத்​தப்பட உள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x