Published : 02 Sep 2025 06:30 AM
Last Updated : 02 Sep 2025 06:30 AM

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை அதிகாரிகள் கவனமுடன் பின்பற்ற வேண்டும்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: ​வி​தி​மீறல் கட்​டிடங்​கள் தொடர்​பான நீதி​மன்ற உத்​தர​வு​களைப் பின்​பற்​று​வ​தில் அதி​காரி​கள் கவன​முடன் செயல்பட வேண்​டும் என அவம​திப்பு வழக்​கில் சென்னை மாநக​ராட்​சிக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

சென்னை மாநக​ராட்சி கோடம்​பாக்​கம் மண்​டலத்​துக்கு உட்​பட்ட விரு​கம்​பாக்​கம் பகு​தி​யில் விதி​களை மீறி கட்​டப்​பட்​டுள்ள கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி, அப்​பகு​தி​யைச் சேர்ந்த பி.​தாமஸ் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்​கில் கடந்த 2023 ஏப்​ரல் முதல் பல்​வேறு உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தும் அதை அதி​காரி​கள் அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் மற்​றும் கோடம்​பாக்​கம் மண்டல அதி​காரி​களுக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து நீதி​மன்ற அவம​திப்பு வழக்கை விசா​ரணைக்கு எடுத்து சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் ஆஜராக உத்​தர​விட்​டது.

அதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போதுநீதி​மன்​றத்​தில் ஆஜரான மாநக​ராட்சி அதி​காரி​கள், விரு​கம்​பாக்​கம்பகு​தி​யில் விதி​களை மீறி கட்டப்​பட்​டிருந்த சூசன் ஜான் என்​பவருக்​குச் சொந்​த​மான கட்​டிடம் கடந்தமாதம் பூட்டி சீல் வைக்​கப்​பட்​ட​தாக​வும், தாமத நடவடிக்கைக்​காக நிபந்​தனையற்ற மன்​னிப்பு கோரு​வ​தாக​வும் தெரி​வித்​தனர்.

அதையடுத்து நீதிப​தி​கள், செய்த தவறுக்​காக அதி​காரி​கள் மன்​னிப்பு கோரி​யுள்​ளனர். ஆனால் அதே​நேரம் விதி​களை மீறு​வோருக்கும், ஆக்​கிரமிப்​பாளர்​களுக்​கும் வாய்ப்​பளிக்​கும் வகை​யில் அதி​காரி​கள் அலட்​சி​யப் போக்​குடன் செயல்​படக்​கூ​டாது. இந்த வழக்​கில் விதி​மீறி கட்​டப்​பட்​டுள்ள கட்​டிடத்​துக்கு சீல் வைத்​து​விட்​ட​தால் மேற்​கொண்டு எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்​கத் தேவையில்​லை. எதிர்​காலத்​தில் நீதி​மன்ற உத்​தர​வு​களை பின்​பற்​று​வ​தில் அதி​காரி​கள் கவன​முடன் செயல்பட வேண்​டும் என எச்சரித்​து வழக்​கை முடித்​து வைத்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x