Published : 01 Sep 2025 08:36 AM
Last Updated : 01 Sep 2025 08:36 AM

டிஜிபி நியமன விவகாரம்: பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட திமுக அரசு - அண்ணாமலை விமர்சனம்

கோவை: டிஜிபி நியமனத்​தில் திமுக அரசு பொறுப்​பற்ற முறை​யில் செயல்​பட்​டுள்​ள​தாக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறினார்.

இந்து முன்​னணி சார்​பில் விநாயகர் சதுர்த்தி விசர்​ஜனப் பொதுக் கூட்​டம் கோவை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: தமிழக முதல்​வர் ஸ்டா​லின் 2026-ம் ஆண்டு ஓய்​வு​பெறப் போகிறார். அதனால் பிரிவுபச்​சார விழா​வாக ஜெர்​மனி, லண்​ட​னுக்கு சென்​றுள்​ளார். ஆட்​சிக்கு வந்​தால் இந்து கோயில்​களை புனரமைக்க ஆண்​டு​தோறும் ரூ.1,000 கோடி ஒதுக்​கப்​படும் என்​றனர். நான்கு ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில் 155 கோடி ரூபாய் மட்​டுமே ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் பொறுப்பு டிஜிபி-​யாக ஒரு​வர் பொறுப்​பேற்​றுள்​ளார். சங்​கர் ஜிவால் பணி ஓய்வு பெற்ற நிலை​யில் 6 பேர் காத்​திருப்பு பட்​டியலில் உள்​ளனர். அவர்​களில் முதல் மூவரில் ஒரு​வர் பொறுப்​பேற்க வேண்​டும்.

இந்த விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றம் தலை​யிட்​டும்​கூட, டிஜிபி​யாக ஒரு​வரை நியமிக்​க​வில்​லை. 9-வது இடத்​தில் உள்ள ஒரு​வரை பொறுப்பு டிஜிபி​யாக நியமித்​துள்​ளனர். டிஜிபி விவ​காரத்​தில் திமுக அரசு பொறுப்​பற்ற முறை​யில் செயல்​பட்​டுள்​ளது.

பெண்​கள் பாது​காப்பு விஷ​யத்​தில் சென்னை 21-வது இடத்​தில் உள்​ளது. பெண்​களுக்கு பாது​காப்பு இல்லை என்​ப​தையே இது காட்​டு​கிறது. இவ்​வாறு அண்ணாமலை பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x