Published : 01 Sep 2025 07:22 AM
Last Updated : 01 Sep 2025 07:22 AM

செப்.4-ல் மதுரையில் நடக்கவிருந்த மாநாடு தள்ளிவைப்பு: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

சென்னை: மதுரை​யில் செப்​.4-ம் தேதி நடை​பெறு​வ​தாக இருந்த மாநாடு தள்​ளிவைக்​கப்​படு​வ​தாக முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தரப்பு அறி​வித்​துள்​ளது.

அதி​முகவை கைப்​பற்ற முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நடத்​திய சட்​டப் போராட்​டம் தொய்​வடைந்து வரும் நிலை​யில், பாஜக​வும் அவரை கைவிட்​டது. அதி​முக​வுடன் பாஜக கூட்​டணி வைத்​த​திலிருந்​து, பன்​னீர்​செல்​வத்தை கண்​டு​கொள்ளவில்லை என விரக்​தி​யில் இருந்தார்.

இந்​நிலை​யில், கடந்த ஜூலை 31-ம் தேதி சென்​னை​யில் பன்​னீர்​செல்​வம் தலை​மை​யில் நடை​பெற்ற அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு​வின் உயர்​மட்ட ஆலோ​சனைக்​குப் பிறகு, பாஜக கூட்​ட​ணியி​லிருந்து வில​கு​வ​தாக பன்​னீர்​செல்​வம் அறி​வித்​தார். அதற்கு முன்​பாக முதல்​வர் ஸ்டா​லினை 3 முறை சந்​தித்து பரபரப்பை ஏற்​படுத்​தி​னார். முன்னதாக, செப்​.4-ம் தேதி மதுரை​யில் மாநாடு நடத்​தப்​படும் என்று பன்​னீர்​செல்​வம் அறி​வித்​திருந்​தார்.

இந்த மாநாடு தள்​ளிவைக்​கப்​படு​வ​தாக ஓபிஎஸ் தரப்பு நேற்று அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக பன்​னீர்​செல்​வம் தரப்​பினரிடம் கேட்​ட​போது, “தேர்​தலுக்கு இன்​னும் 7 மாதங்​கள் உள்​ளன. அரசி​யலில் எந்த நேரத்​தி​லும், எது வேண்​டு​மா​னாலும் நடக்​கலாம். வலிமை​யான கூட்​டணி அமைந்த பிறகு மாநாட்​டை, கூட்​ட​ணிக் கட்​சிகளை அழைத்து நடத்​திக்​கொள்​ளலாம் என்ற திட்​டம் உள்​ளது. அதனால் மா​நாடு நடை​பெறும்​ தேதி தள்​ளி வைக்​கப்​பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x