Last Updated : 01 Sep, 2025 09:49 AM

1  

Published : 01 Sep 2025 09:49 AM
Last Updated : 01 Sep 2025 09:49 AM

‘என்னை சாதிய கண்ணோட்டத்துடன் புறக்கணிக்கிறார்கள்...’ - நீக்கப்பட்ட தென்காசி இளைஞர் காங்கிரஸ் தலைவர் புலம்பல்!

சாதி ரீதியாக தன்னை ஒதுக்கிவைப்பதாக தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் புகார் கிளப்பி இருந்த நிலையில், அவரை மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது இளைஞர் காங்கிரஸ் தலைமை!

தமிழக இளைஞர் காங்​கிரஸ் தலை​வ​ராக சூரிய பிர​காஷ் அண்​மை​யில் தான் அறிவிக்​கப்​பட்​டார். இதையடுத்து சுற்​றுப் பயணத்​தில் இருக்​கும் அவர், அண்​மை​யில் தென்​காசி மாவட்ட இளைஞர் காங்​கிரஸ் ஊழியர் கூட்​டத்​தி​லும் கலந்து கொண்​டார். மாவட்ட இளைஞர் காங்​கிரஸ் தலை​வ​ரான சுரேஷ் இளவரசன் இல்​லாமல் துணைத் தலை​வர் முத்​துக்​கு​மார் தலை​மை​யில் இந்​தக் கூட்​டத்தை நடத்​தி​ய​தால் கூட்​டம் நடந்து கொண்​டிருந்த போதே தனது ஆதர​வாளர்​களு​டன் அங்கு வந்த சுரேஷ் இளவரசன், மாவட்​டத் தலை​வ​ரான தன்னை புறக்​கணித்​து​விட்டு எப்​படி கூட்​டத்தை நடத்​தலாம் எனக் கேட்டு வாக்​கு​வாதம் செய்​தார்.

மேலும், “பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவ​னாக இருப்​ப​தால் என்னை சாதிய ரீதி​யில் புறக்​கணிக்​கி​றார்​கள்” என்ற பகீர் குற்​றச்​சாட்​டை​யும் பட்​ட​வர்த்​தன​மாக எடுத்​து​வைத்​தார்.இதனால் கூட்​டத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டது. மற்ற நிர்​வாகி​கள் சமா​தானப்​படுத்த முயன்​றும் கேட்​காத சுரேஷ் இளவரசன், கூட்​டத்​தைப் புறக்​கணித்து வெளிநடப்பு செய்​தார். இந்த நிலை​யில் தான் அவரை மாவட்​டத் தலை​வர் பொறுப்​பிலிருந்து சஸ்​பெண்ட் செய்​திருக்​கி​றார் இளைஞர் காங்​கிரஸ் மேலிட பொறு​பார்​வை​யாளர் சகரிகா ராவ்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய சுரேஷ் இளவரசன், “சூரிய பிர​காஷ் தமிழக இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் பதவிக்கு வந்து இன்​னும் ஒரு மாதம்​கூட ஆகவில்​லை. தென்​காசி மாவட்ட காங்​கிரஸ் பிர​முகர் ஒரு​வரது இல்​லத் திருமண விழாவுக்​காக வந்த அவர், மாவட்ட இளைஞர் காங்​கிரஸ் கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யு​மாறு கூறி​னார். அதே நாளில் எனக்கு வேறு வேலை இருந்​த​தால் இன்​னொரு நாளில் கூட்​டத்தை வைத்​துக் கொள்​ளலாம் என்று சொன்​னேன். அதை ஏற்​காத​தால், நேரத்​தை​யா​வது மாற்றி வைக்​கும்​படி சொன்​னேன். அதை​யும் கேட்​காமல் என்னை விட்​டு​விட்டு மாவட்ட இளைஞர் காங்​கிரஸ் துணைத் தலை​வர் மூலம் கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​தார்.

கூட்​டத்​துக்​கான போஸ்​டரிலும் எனது போட்டோ இல்​லை. நான் பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவன் என்​ப​தால் சாதிரீ​தி​யாக ஒதுக்க திட்​ட​மிட்டே என்​னைப் புறக்​கணித்​தனர். அதை ஏற்​க​முடி​யாமல் தான் அவசர​மாக புறப்​பட்டு வந்து கூட்​டத்​துக்​குச் சென்று விளக்​கம் கேட்​டேன். எனக்கு உரிய பதிலைச் சொல்​லாத​தால் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. அதனால் வெளிநடப்​புச் செய்​தேன். இது தொடர்​பாக என்​னிடம் விளக்​கம் கேட்​டதற்கு உரிய பதிலை அளித்​துள்​ளேன். அப்​படி இருக்​கை​யில், நான் கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​ய​வில்லை என்​றும், கூட்​டத்​துக்கு வந்து வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​ட​தாக​வும் மேலிட பொறுப்​பாளர் சகரிகா ராவிடம் மாநில தலை​வர் புகார் அளித்​துள்​ளார். அதன்​பேரில் என்னை சஸ்​பெண்ட் செய்​துள்​ளார் சகரிகா ராவ்.

இந்த மாவட்​டத்​தில் அதி​க​மான உறுப்​பினர்​களை இளைஞர் காங்​கிரஸில் சேர்த்​து, இரண்​டாவது முறை​யாக மாவட்ட தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளேன். உறுப்​பினர்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட என்னை சஸ்​பெண்ட் செய்ய மேலிட பொறுப்​பாள​ருக்கு அதி​காரம் இல்​லை. இது தொடர்​பாக இளைஞர் காங்​கிரஸ் அகில இந்​திய தலை​மைக்​கும் என் தரப்பு நியா​யத்தை தெளிவுபடுத்தி உள்​ளேன்” என்​றார்.

தொடர்ந்து பேசிய சுரேஷ் இளவரசனின் தந்​தை​யும் செங்​கோட்டை வட்​டார காங்​கிரஸ் தலை​வ​ரு​மான கதிர​வன், “தேர்​தலில் போட்​டி​யிட்டு பதவிக்கு வந்​துள்ள எனது மகனை நியமன உறுப்​பின​ராக வந்​தவர் சஸ்​பெண்ட் செய்​வதற்கு அதி​காரம் இல்​லை. சாதி​யரீ​தி​யில் எனது மகனை புறக்​கணித்​திருப்​பது எங்​கள் சமு​தாய மக்​கள் மத்​தி​யில் காங்​கிரஸ் மீது அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. எனவே, இதற்​குக் காரண​மான இளைஞர் காங்​கிரஸ் மாநில தலை​வர் மீது தமிழ்​நாடு காங்​கிரஸ் கமிட்டி தலை​மை​யும், அகில இந்​திய தலை​மை​யும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

சுரேஷ் இளவரசன் சாதிய கண்​ணோட்​டத்​துடன் புறக்​கணிக்​கப்​படு​கி​றாரா என மாவட்ட இளைஞர் காங்​கிரஸ் துணைத் தலை​வர் முத்​துக்​கு​மாரிடம் கேட்​டதற்​கு, “இளைஞர் காங்​கிரஸ் மாவட்ட தலை​வ​ராக கடந்த முறை சுரேஷ் இளவரசன் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​தில் இருந்து அவருடன் இணைந்தே பணி​யாற்றி வரு​கிறேன். சாதிய கண்​ணோட்​டத்​துடன் அவரை யாரும் அணுக​வில்​லை.

விருதுநகர், திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்ட இளைஞர் காங்​கிரஸ் மாநில தலை​வர், தென்​காசி கூட்​டத்​துக்​கும் ஏற்​பாடு செய்ய அறி​வுறுத்​தி​னார். ஒரு வாரம் முன்​ன​தாகவே சொல்​லி​யும் சுரேஷ் இளவரசன் தன்​னால் கூட்​டத்​துக்கு வர முடி​யாது என்​றும், கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்ய முடி​யாது என்​றும் சொன்​ன​தால் நாங்​கள் மாநில தலை​வரின் அறி​வுறுத்​தல்​படி கூட்​டத்தை ஏற்​பாடு செய்​தோம்.

கூட்​டத்​துக்கு முதல் நாள் என்​னிடம் பேசிய சுரேஷ் இளவரசன், கூட்​டத்தை நடத்த வேண்​டாம் என்​றார். ஆனால் அதற்கு உடன்​ப​டாத நான், ‘கூட்​டத்​திற்கு வந்து உங்​கள் பிரச்​சினையைச் சொல்​லுங்​கள்’ என்​றேன். அதன்​படி கூட்​டத்​துக்கு வந்த அவர் வாக்​கு​வாதம் செய்​தார். ‘கூட்​டத்​துக்கு வர முடி​யாது என்று சொன்ன உங்​களால் இப்​போது எப்​படி வர முடிந்​தது?’ என்று மாநில பொறுப்​பாளர் சகரிகா கேட்​டதற்கு அவரால் பதில் சொல்ல முடிய​வில்​லை. இதையடுத்தே அவரை சகரிகா சஸ்​பெண்ட் செய்​துள்​ளார்” என்​றார். எல்லா கட்​சிகளி​லும் குடுமிபிடி சண்​டைகள் நடக்​கை​யில் நாம் மட்​டும் சும்மா இருந்​தால் எப்​படி என கதர் பார்ட்​டிகளும் களத்​தில் இறங்​கிவிட்​டார்​கள் போலிருக்​கிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x