Published : 31 Aug 2025 10:30 AM
Last Updated : 31 Aug 2025 10:30 AM

ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்ததாக பொய் கூறுவதா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழகத்தில் ரூ.10.62 லட்​சம் கோடி முதலீடு வந்​து​விட்​ட​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பொய் சொல்வதாக பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய முதல்​வர், திமுக ஆட்​சிக்கு வந்த பின் ரூ.10 லட்​சத்து 62,752 கோடிக்​கான முதலீடு​களை ஈர்த்​து, 32 லட்​சத்து 81,032 பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உறுதி செய்​யப்​பட்​ட​தாக தெரி​வித்​தார். திமுக அரசு கையெழுத்​திட்ட முதலீட்டு ஒப்​பந்​தங்​களில் 10 சதவீதம் கூட நடை​முறைக்கு வராத நிலை​யில் முதல்​வர் கூறு​வது பச்சை பொய். கோயபல்ஸ் கொள்​கையை கடைபிடித்து பொய்யை மீண்​டும், மீண்​டும் கூறி வரு​கின்​றனர். மக்​கள் இதனை நம்ப மாட்​டார்​கள்.

திமுக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​கள் தொடர்​பாக​வும் திமுக அரசு இப்​படித்​தான் பொய்​யுரைத்து வந்​தது. தொழில் முதலீடு தொடர்​பான விவகாரங்களிலும் 77 சதவீதம், 80 சதவீதம், 100 சதவீதம் என்று கதைகளை கூறி வரு​கிறார்​கள். இவை அனைத்​தும் அப்​பட்​ட​மான பொய் என்​பதை ஆதா​ரங்​களு​டன் பாமக அம்​பலப்​படுத்தும்.

தமிழகத்​துக்கு வந்த முதலீட்டு விவரங்​கள் குறித்து திமுக அரசுக்கு மடி​யில் கனமில்லை என்​றால், வெள்ளை அறிக்கை வெளி​யிட்டு நிரூபிக்​கலாமே. ஆனால், அதை திமுக அரசு செய்​யாது. காரணம் பொய் மட்​டும்​தான் திமுக​வின் முதலீடு. திமுக​வின் இந்த மோசடிகள் வெகு விரை​வில் அம்​பல மாகும். அப்​போது திமுக அரசை ஆட்​சியி​லிருந்து தமிழக மக்​கள் விரட்டி அடிப்​பார்​கள். இவ்​வாறு கூறியுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x