Published : 31 Aug 2025 10:24 AM
Last Updated : 31 Aug 2025 10:24 AM
சென்னை: தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இன்று பதவியேற்கிறார்.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து பணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் டிஜிபியாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பொறுப்பு டிஜிபியாக தற்போது நிர்வாக பிரிவில் உள்ள வெங்கடராமனை தமிழக அரசு நியமிக்க முடிவு செய்தது. அதன்படி இன்று மதியம் சங்கர் ஜிவால் முறைப்படி பணி ஓய்வு பெற்று அந்த பொறுப்பு வெங்கடராமனிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கும்.
வெங்கடராமன் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1968-ல் பிறந்த இவர், 1994-ல் ஐபிஎஸ் ஆக தேர்வாகி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். குறிப்பாக முக்கியம் வாய்ந்த சிபிசிஐடி தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவிகளில் பணியாற்றி அரசின் பாராட்டை பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT