Published : 31 Aug 2025 10:04 AM
Last Updated : 31 Aug 2025 10:04 AM

மோடி ஆட்சியில் வெளியுறவு கொள்கை தோல்வி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்​பின் வரி விதிப்​பால் தமிழகத்​தின் பொருளாதாரம் சரி​யும். பிரதமர் மோடி ஆட்​சி​யில் வெளி​யுறவுக் கொள்கை தோல்வி அடைந்​துள்ளதாக தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டினார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்​தி​யாளர்களிடம் அவர் கூறிய​தாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்​தியா மீது 50 சதவீத வரி விதித்​துள்​ளார். ரஷ்யா கச்சா எண்​ணெய்யை குறைந்த விலைக்கு தரு​வ​தாக இந்​தியா தெரி​வித்​துள்​ளது. ஆனால் அம்​பானிக்​கும், அதானிக்​கும்​தான் கச்சா எண்​ணெய்யை குறைந்த விலைக்கு ரஷ்யா கொடுக்​கிறது. அதன் பயன் இந்​திய மக்​களுக்கு சென்​றடைய​வில்​லை.

அமெரிக்​கா​வின் வரி விதிப்​பால் தமிழகத்​தின் பொருளா​தா​ரம் சரிந்து வரு​கிறது. மத்​தி​யில் பிரதமர் மோடி தலை​மையி​லான ஆட்​சி​யில் வெளி​யுறவுக் கொள்கை தோல்வி அடைந்​துள்​ளது.

வாக்கு திருட்டு தொடர்​பாக தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில் மாநில மாநாடு செப்​.7-ம் தேதி திருநெல்​வேலி​யில் நடை​பெற உள்​ளது. திரு​வள்​ளூர் எம்.பி. சசி​காந்த் செந்​திலின் உண்​ணா​விரதம் நோக்​கம் சரி​யானது. ஆனால் வாக்கு திருட்டு தொடர்​பான விழிப்​புணர்வை மடை​மாற்​றும் வகை​யில் உள்​ளது. அவர் தனது போராட்​டத்​தைக் கைவிட வேண்​டும்.

ஜி.கே.மூப்​ப​னார் ஒரு​போதும் பாஜகவை ஏற்​றுக்​கொண்​ட​தில்​லை. அவரது மகன் ஜி.கே.​வாசன், அவரது அப்​பா​வின் நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக இருக்​கிறா​ரா என தெரிய​வில்​லை. இவ்​வாறு கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x