Published : 31 Aug 2025 08:46 AM
Last Updated : 31 Aug 2025 08:46 AM

அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது

சென்னை: ஓய்​வு​பெறும் நாளில் அரசு ஊழியர்​களை பணிநீக்​கம் செய்​யக் கூடாது என்று தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக மனிதவள மேலாண்​மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யுள்​ள​தாவது: அரசு ஊழியர்​கள் மீதான குற்​றச்​சாட்டு தொடர்​பான நடவடிக்​கையை ஓய்​வு​பெறு​வதற்கு 3 மாதங்​களுக்கு முன்​னரே முடித்​து​விட வேண்​டும். இல்​லா​விட்​டால், நிர்​வாக ரீதியி​லான தாமதத்தை கருத்​தில் கொண்​டு, சம்​பந்​தப்​பட்ட அரசு ஊழியர் ஓய்​வு​ பெற அனு​ம​திக்க வேண்​டும்.

ஓய்வுபெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது. ஓய்​வு​பெறும் நாளுக்கு 3 மாதங்​களுக்கு முன்பு ஏதேனும் குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​பட்​டால், போர்க்​கால அடிப்​படை​யில் விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்​கலாம். தவறு கண்​டறியப்​பட்​டால் பணி இடைநீக்​கம்​ செய்​ய​லாம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x