Last Updated : 30 Aug, 2025 10:42 AM

 

Published : 30 Aug 2025 10:42 AM
Last Updated : 30 Aug 2025 10:42 AM

வளர்த்தவர்களே எதிராக வாள்வீச வருவதால் போடியில் 4-வது முறையாகவும் ஜெயிப்பாரா ஓபிஎஸ்?

1989-ல் ஜெயலலிதா முதல்முறையாக தேர்தல் அரசியலில் குதித்து வெற்றி பெற்ற போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 2011 தொடங்கி கடந்த மூன்று தேர்தல்களாக தொடர் வெற்றிகளை குவித்து வந்த ஓபிஎஸ், இப்போது போடி அரசியல் களத்தில் தனிமைப்பட்டு நிற்பதாகச் சொல்கிறார்கள்.

தென்மாவட்டங்களில் தாமரைக்கனி, அப்பாவு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கட்சி பின்புலம் இல்லாத போதும் தங்களது சொந்த செல்வாக்கால் சுயேச்சையாக நின்றே தேர்தல் வெற்றிகளை சுவைத்திருக்கிறார்கள். ஆனால், அதிமுக மற்றும் இரட்டை இலையின் செல்வாக்கில் போடியில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த ஓபிஎஸ், அதைத் தக்கவைப்பதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்காததால் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறார்.

ஒரு காலத்​தில் ஜெயலலி​தாவுக்கு அடுத்த நிலை​யில் கட்​சி​யிலும் ஆட்​சி​யிலும் அதி​காரப் புள்​ளி​யாக இருந்த ஓபிஎஸ், அந்த அதி​காரமெல்​லாம் என்​றைக்​கும் நிலைத்​திருக்​கும் என நம்​பிய​தாலோ என்​னவோ சொந்​தத் தொகு​தியை தக்​கவைப்​ப​தற்​கான சிந்​தனையே இல்​லாமல் இருந்​து​விட்​டார் என்​கி​றார்​கள் போடி அரசி​யல்​வா​தி​கள். தனது தொகு​தியை தக்​கவைப்​பதை விட்​டு​விட்டு ஜெயலலிதா இறப்​புக்​குப் பின்​னால் அதி​முக-​வின் அதி​காரத்​தைக் கைப்​பற்​று​வ​திலேயே அக்​கறை​யாய் இருந்​து​விட்​டார் ஓபிஎஸ். இதனால் தனக்கு வாக்​களித்த மக்​களுக்​கும் அவருக்​கும் இடையி​லான நெருக்​கத்​தில் இடைவெளி விழுந்​து​போனது.

ஒரு​கட்​டத்​தில் அதி​முக-வை விட்டு ஒதுக்​கப்​பட்ட நிலை​யில், தேனி மாவட்ட அதி​முக-​வில் முன்பு அவருக்கு வணக்​கம் வைத்து நின்ற பலரும் அவரைப் பின்​னுக்​குத் தள்ளி கட்​சிக்​குள் பதவி​களை கைப்​பற்​றியதுடன் தேர்​தலில் ஓபிஎஸ்​ஸையே எதிர்த்து போட்​டி​யிட துணி​யுமளவுக்கு இப்​போது தயா​ராகி விட்​டார்​கள்.

2024 மக்​கள​வைத் தேர்​தலில் தேனி​யில் அதி​முக வேட்​பாள​ராகப் போட்​டி​யிட்ட நாராயண​சாமி, முன்​னாள் எம்​பி-​யான பார்த்​திபன் உள்​ளிட்ட பலரும் இப்​போது ஓபிஎஸ்​ஸின் போடி தொகு​தி​யில் போட்​டி​யிட முஸ்​தீபு காட்டி வரு​கி​றார்​கள். அதே​போல் திமுக தரப்​பில் முன்​னாள் எம்​எல்​ஏ-​வான லட்​சுமணன், போடி நகரச் செய​லா​ளர் புருஷோத்​தமன் உள்​ளிட்​டோர் ஓபிஎஸ்​ஸிடம் இருந்து போடியை கைப்​பற்​றும் முயற்​சி​யில் முனைப்​பாக இருக்​கி​றார்​கள். இவர்​களெல்​லாம் தேர்​தலுக்​காக இப்​படி தயா​ராகிக் கொண்​டிருக்க சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான ஓபிஎஸ் எவ்​வித சலன​மும் இல்​லாமல் இருக்​கி​றார்.

ஸ்டா​லினை சந்​தித்​துப் பேசி​யதன் மூலம் ஓபிஎஸ் தனி அணி​யாகவே திமுக தயவுடன் மீண்​டும் போடி​யில் போட்​டி​யிடலாம் என்ற பேச்​சும் இருக்​கிறது. ஆனால், போடி தொகு​திக்கு உட்​பட்ட தேனி வடக்கு மாவட்ட திமுக செய​லா​ள​ராக இருக்​கும் தங்​க தமிழ்ச்​செல்​வனுக்​கும் ஓபிஎஸ்​ஸுக்​கும் அதி​முக-​வில் இருக்​கும் காலம் தொட்டே ஆகாது என்​பதை சுட்​டிக்​காட்​டும் போடி தொகுதி அதி​முக-​வினர், “அப்​புறம் எங்​கிட்டு ஓபிஎஸ் ஜெயிக்​க?” என்று இப்​போதே ஊதி​விடு​கி​றார்​கள். இதையெல்​லாம் கணக்​குப் போட்​டே, மக்​கள​வைத் தொகு​தி​யில் ராம​நாத​புரத்​தில் போட்​டி​யிட்​டது போல் சட்​டமன்​றத் தேர்​தலிலும் ராம​நாத​புரம் அல்​லது விருதுநகர் மாவட்​டத்​தில் ஏதாவதொரு தொகு​தி​யில் போட்​டி​யிடும் பி பிளானை​யும் ஓபிஎஸ் தரப்​பில் வைத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

இது குறித்து நம்​மிடம் பேசிய ஓபிஸ் விசு​வாசிகள், “ஓபிஎஸ்​ஸூக்கு போடி​யில் தனிப்​பட்ட செல்​வாக்கு இல்லை என்ற தோற்​றத்தை அவரைப் பிடிக்​காதவர்​கள் தான் திட்​ட​மிட்டு பரப்​பு​கி​றார்​கள். ஆனால், ஓபிஎஸ் காலத்​தில்​தான் போடி தொகு​தி​யில் அதி​க​மான கல்வி நிறு​வனங்​கள் வந்​துள்​ளது. அரசு ஐடிஐ, அரசு கலைக் கல்​லூரி, பொறி​யியல் கல்​லூரி உள்​ளிட்​ட​வற்றை ஓபிஎஸ் கொண்டு வந்​திருக்​கி​றார்.

கொட்​டக்​குடி ஆற்​றில் தடுப்​பணை, போடி நகராட்​சிக்கு பிரத்​யேக குடிநீர் திட்​டம் உள்​ளிட்​ட​வை​யும் அவரது முயற்​சி​யால் வந்​தது தான். அதனால் போடி​யில் அவருக்​கான செல்​வாக்கு இம்​மியள​வும் குறை​யாமல் அப்​படியே இருப்​ப​தால் நான்​காவது முறை​யும் அவர் இங்கே ஜெயிப்​பார்” என்​கி​றார்​கள்.

ஸ்டா​லினைச் சந்​தித்​துப் பேசி​யதே அரசி​யல் சறுக்​கலாகப் அலசப்​படும் நிலை​யில், ஓபிஎஸ் போடி​யில் தனது தனித்த செல்​வாக்கை எப்​படி நிரூபிக்​கி​றார் என்று பார்​க்​கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x