Published : 30 Aug 2025 05:31 AM
Last Updated : 30 Aug 2025 05:31 AM

அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து தொண்டர்கள் வழக்கு தொடர அனுமதித்த உத்தரவு ரத்து

சென்னை: அ​தி​முக​வின் அடிப்​படை விதி​கள் திருத்​தப்​பட்​டதை எதிர்த்து தொண்​டர்​கள் சார்​பில் உரிமை​யியல் வழக்​குத் தொடர அனு​ம​தி​யளித்து தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு ரத்து செய்யப்பட்டது.

அதி​முக​வின் அடிப்​படை விதி​களைத் திருத்​தம் செய்ததை எதிர்த்​தும், உள்​கட்சி தேர்​தலை எதிர்த்​தும் அதி​முக தொண்​டர்​கள் சார்​பில் உரிமை​யியல் வழக்​குத் தொடர அனு​மதி கோரி வழக்​கறிஞர் பா. ராம்​கு​மார் ஆதித்​தன், கே.சி.சுரேன் பழனி​சாமி ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​தனர்.

அதில், “​முக பொதுச்​செய​லா​ள​ராகப் பதவி வகித்த ஜெயலலிதா மறைவுக்​குப்​பிறகு, கட்​சி​யில் ஒருங்​கிணைப்​பாளர், இணை ஒருங்​கிணைப்​பாளர் பதவி​கள் உரு​வாக்​கப்​பட்​டதும், அதன்பிறகு இடைக்​கால பொதுச்​செய​லாளர், பின்​னர்பொதுச் செயலாளர் பதவி உருவாக்​கப்​பட்​டதும் கட்​சி​யின் அடிப்​படை விதி​களுக்​கும், சட்ட திட்​டங்​களுக்​கும் எதி​ரானது’’ என கோரி​யிருந்​தனர்.

இந்த மனுக்களை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிபதி பி.வேல்​முரு​கன், அதி​முக கட்சி விதி​கள் திருத்​தப்​பட்​டதற்கு எதி​ராக உரிமை​யியல் வழக்​குத்​தொடர இரு​வருக்​கும் அனு​ம​தி​யளித்து உத்​தரவிட்​டிருந்​தார். தனி நீதிப​தி​யின் இந்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை, நீதிப​தி​கள் அனிதா சுமந்த், என்​.செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் ஏற்​கெனவே நடந்​தது.

அப்​போது பழனி​சாமி தரப்​பில், “அ​தி​முக​வுக்கு எதி​ராக வழக்கு தொடர்ந்​துள்ள ராம்​கு​மார் ஆதித்​தனும், சுரேன் பழனி​சாமி​யும் அதி​முக உறுப்​பினர்​களே கிடை​யாது. எனவே இதுதொடர்​பாக தனி நீதிபதி பிறப்பித்​துள்ள உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும்’ என வாதிடப்​பட்​டது.

இதற்கு ராம்​கு​மார் ஆதித்​தன் மற்​றும் சுரேன் பழனி​சாமி தரப்​பில், ‘‘நாங்​கள் அதி​முக​வின் உறுப்​பினர்​கள் என்​பதை சட்​டப்​பூர்​வ​மாக நிரூபித்த பிறகே அதி​முக​வின் அடிப்​படை விதி​கள் திருத்​தப்​பட்​டதை எதிர்த்து வழக்​குத்​ தொடரதனி நீதிபதி அனு​ம​தியளித்​தார்.

எனவே பழனிசாமிதாக்கல் செய்​துள்ள இந்த மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டும்’’ என வாதிடப்​பட்​டது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் அனிதா சுமந்த், என்​.செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்ளி வைத்​திருந்​தது.

இந்​நிலை​யில் நீதிப​தி​கள் நேற்று பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில், “பழனி​சாமி தொடர்ந்​துள்ள மேல்முறை​யீட்டு மனு ஏற்​புடையது என்​ப​தால் அதி​முக​வின் விதி​கள் திருத்​தப்பட்​டதை எதிர்த்து தொண்​டர்​கள் சார்​பில் வழக்​குத் தொடர ராம்​கு​மார் ஆதித்​தன், சுரேன் பழனி​சாமி ஆகியோ​ருக்குஅனு​ம​தியளித்து தனி நீதிபதபிறப்​பித்த உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. அதே​நேரம் மனு​தா​ரர்​கள் தனிப்பட்ட முறை​யில்​ வழக்குத்​ தொடர தடை​​ இல்​லை’’ என உத்​தர​விட்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x