Published : 27 Aug 2025 05:36 PM
Last Updated : 27 Aug 2025 05:36 PM
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (28.08.2025) மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை,
இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-59ல், பார்க் டவுன், ஏகாம்பரேஸ்வர அக்ரஹாரம் தெருவில் உள்ள ஶ்ரீமகேஸ்வரி சபா, திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-75ல், தலைமைச் செயலக காலனி 3வது தெருவில் உள்ள தலைமைச் செயலக மெட்ரிக் பள்ளி, அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-103ல் அண்ணாநகர் 7வது பிரதான சாலையில் உள்ள உடற்பயிற்சிக் கூடம்,
தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-121ல் மயிலாப்பூர், இராயப்பேட்டை பிரதான சாலை, ரங்கையா கார்டனில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. இளம் ஆண்கள் இந்திய சங்கம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-134ல் அசோக் நகர், பக்தவச்சலம் தெருவில் உள்ள விளையாட்டுத் திடல், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152ல், ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகம்,
ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-161ல் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். நிதி திருமண மண்டபம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-178ல், தரமணி, சி.எஸ்.ஐ.ஆர். சாலையில் உள்ள 5சி பேருந்து நிலையம் ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT